Advertisement

பூச்சாண்டி காட்டுவதை நிறுத்துங்கள் : பழனிசாமி ஆவேசம்

"எத்தனை பேர் இந்தக் கட்சியை எதிர்த்து பார்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை, சிலர் பழத்தைத் துாக்கி கொண்டு திரிகின்றனர்" என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பேசினார்.

சிதம்பரம் அ.தி.மு.க., வேட்பாளர் சந்திகாசனை ஆதரித்து பழனிசாமி பேசியதாவது:

நாளுக்கு நாள் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. '2024க்கு பின் அ.தி.மு.க., இருக்காது' என சிலர் பேசுகின்றனர், அ.தி.மு.க., இங்கு தான் இருக்கும். ஜூன் 4ம் தேதிக்கு பிறகு யார் காணாமல் போவார்கள் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள்.

அ.தி.மு.க., பொன்விழா கண்ட கட்சி, மதுரையில் நடந்த மாநாட்டை இந்தியாவே பார்த்தது. வெயில் காலத்தில் உஷ்னம் அதிகமாகிவிட்டது போல இருக்கிறது. அதனால் இப்படி மாறி மாறி பேசி வருகின்றனர்.

தெய்வத்தின் அருளாசியுடன் இருக்கும் கட்சி, அ.தி.மு.க., இதை யார் அழிக்க நினைத்தாலும் அவர்கள் காற்றோடு காற்றாக கரைந்து போவார்கள். எத்தனை பேர் இந்தக் கட்சியை எதிர்த்து பார்த்தார்கள். அவர்கள் இருக்கும் இடமே தெரியவில்லை, சிலர் பழத்தைத் துாக்கி கொண்டு திரிகின்றனர்.

அதிமுக.,விடம் பூச்சாண்டி காட்டுவதை நிறுத்திவிடுங்கள். தொண்டர்களின உழைப்பை நம்பி உள்ள கட்சி இது. இந்தியாவில் அதிக உறுப்பினர்களை கொண்ட ஒரே கட்சி அ.தி.மு.க., மட்டுமே. உங்களைப் போல தலைவன் என சொல்லிக் கொள்ளும் கட்சி கிடையாது.

ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஸ்டாலின் எந்த திட்டத்தை நிறைவேற்றி இருக்கிறார். காலத்தை கழித்தது தான் மிச்சம். அ.தி.மு.க., போராடியதால் தான் மகளிர் உரிமை தொகையை ஸ்டாலின் வழங்கினார்.

மக்கள் பயன் பெற்று வந்த அ.தி.மு.க., அரசின் திட்டங்களை ஸ்டாலின் நிறுத்திவிட்டார். மக்கள் வாழ்வதற்கு திண்டாடுகிறார்கள். இதைப் பற்றி ஸ்டாலினுக்கு எந்த அக்கறையும் கிடையாது.

தன் குடும்பத்தை பற்றி சிந்திக்கும் ஒரே முதல்வர் ஸ்டாலின். இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்கும் கஞ்சா விற்பனை என தி.மு.க., ஆட்சியில் தமிழகம் சீரழிந்துவிட்டது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலின் போது ராகுல் காந்தி தான் பிரமராக வருவார் என ஸ்டாலின் சொன்னார் ஸ்டாலின். அவர் ராசிக்காரர். அவர் சொன்னதும் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட இழந்துவிட்டது. மக்களின் ஆதரவை ஸ்டாலின் இழந்துவிட்டதால், இண்டியா கூட்டணியில் இருந்து ஓட்டுகளைப் பெற முயற்சிக்கிறார்.

பா.ஜ., வை நான் எதிர்க்க மாட்டேன் என ஸ்டாலின் சொல்கிறார். அதற்காக துப்பாக்கியை ஏந்தி சுடவா முடியும். பா.ஜ., கூட்டணியில் இருந்து விலகிவிட்டோம். தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு கொண்டுவந்தால் அதை எதிர்க்கும் திராணி அ.தி.மு.க.,வுக்கு மட்டுமே உள்ளது. தி.மு.க., போல நாங்கள் கோழை கிடையாது.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்