Advertisement

மத்திய அமைச்சரவையில் யாருக்கு வாய்ப்பு? அண்ணாமலைக்கு இடம் கிடைக்குமா?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: பிரதமர் மோடியுடன் எத்தனை பேர் மற்றும் யார் யார் மத்திய அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.



பிரதமராக மோடி, இன்று( ஜூன்09) 3வது முறையாக பதவியேற்க உள்ளார். இதற்காக ஜனாதிபதி மாளிகை விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் உடன் இன்று 30 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.



இந்நிலையில், மத்திய அமைச்சர்கள் குறித்து ஆங்கில மீடியாக்களில் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி பா.ஜ.,வின் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், ஜே.பி.நட்டா, அர்ஜூன் ராம் மேவால், அண்ணாமலை, புரேந்தஸ்வரி, ஜோதிராதித்யா சிந்தியா, சர்பானந்தா சோனவல், கிரண் ரிஜிஜூ, நிதின் கட்கரி, அஷ்வினி வைஷ்ணவ், மன்சுக் மாண்டவியா, சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரது பெயர்கள் அடிபடுகின்றன.



தெலுங்கு தேசம், ஐஜத கட்சிக்கு தலா ஒரு மத்திய அமைச்சர் மற்றும் ஒரு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும்.



தெலுங்கு சேத்தின் ராம் மோகன் நாயுடு, சந்திர சேகர் பெம்மசானி

ஐக்கிய ஜனதா தளத்தின் ராம்நாத் தாக்கூர் மற்றும் லாலன் சிங்,

லோக்ஜனசக்தி கட்சியின் சிராக் பஸ்வான்,

ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா கட்சியின் ஜித்தன்ராம் மஞ்சி,

அப்னா தள கட்சியின் அனுபிரியா படேல்

ராஷ்ட்ரிய லோக் தள கட்சியின் ஜெயந்த் சவுத்ரி ஆகியோர் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.



ஏக்நாத் ஷிண்டேயின் சிவசேனா மற்றும் ஜனசேனா கட்சியை சேர்ந்த தலா ஒருவர் மத்திய அமைச்சர் ஆகலாம் எனக்கூறப்படுகிறது.

தேநீர் விருந்து



பிரதமர் மோடி இன்று தனது வீட்டில் தேநீர் விருந்து அளித்தார். அதில் மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்கள் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்