'தினமலர்' நாளிதழை சாடிய பழனிசாமி
தினமலர் உள்ளிட்ட சில ஊடகங்கள் திட்டமிட்டு கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளதாக அ.தி.மு.க., பொதுச்செயலர் தெரிவித்தார்.
சேலம், ஓமலுாரில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பழனிசாமி பேசியதாவது:
அ.தி.மு.க.,வுக்கு யார் பிரதமர் என கேள்வி எழுப்புகின்றனர். பல மாநிலங்களில் பிரதமரை முன்னிறுத்தாமல் வெற்றி பெற்றுள்ளனர். தமிழக மக்கள் நலமோடு இருக்க, தேர்தலில் சிந்தித்து செயல்பட வேண்டும். தேசிய கட்சிகள், தேசிய நலனை மட்டும் சிந்திக்கின்றன. மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்களால் தமிழகம் பாதிப்படைந்தால் அதை தடுப்போம்.
பிரதமரிடம் சிரித்துப் பேசினால் பல்லு தெரியும். அது கூட ஸ்டாலினுக்கு தெரியவில்லை. பா.ஜ.,வோடு நீங்கள் கூட்டணியில் இருந்தபோது இனித்தது. நாங்கள் இருந்தால் கசக்கிறதா? தற்போது வெளியே வந்துவிட்டோம்.
நீங்கள் குரங்கு தாவுவதுபோல், பா.ஜ.,வில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவினீர்கள். இது சரியா?
'தினமலர்' உள்ளிட்ட சில ஊடகங்கள், மக்கள் இடையே, அ.தி.மு.க.,வுக்கு செல்வாக்கு குறைந்துவிட்டது என, தவறான கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளன. அவர்கள் இங்கு திரண்டுள்ள கூட்டத்தை பார்க்க வேண்டும். எங்களுக்கு மக்கள் இடையே எவ்வளவு செல்வாக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். திடல் முழுதும் மக்கள் நிறைந்துஉள்ளனர். மக்கள் ஆசியுடன், அ.தி.மு.க., மீண்டும் ஆட்சியில் அமரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து