ராகு கால ராஜயோகம்: பழனிசாமி திடீர் உற்சாகம்

ஜெயலலிதாவை போன்று, தமிழ்ப்புத்தாண்டு நாளில் ராகு காலம் மற்றும் புதன் ஓரை நேரத்தில், பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்துள்ளார். ராகு காலத்தில் பிரசாரத்தில் ஈடுபடுவதன் வாயிலாக ராஜ யோகம் கிட்டும் என ஜோதிடர்கள் சொன்ன யோசனையை அடுத்தே, அவர் அப்படிப்பட்ட பிரசாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

லோக்சபா தேர்தலில், 33 தொகுதிகளில் அ.தி.மு.க., நேரடியாக போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு, ஏழு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. மார்ச் 24ல், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திருச்சியில் தேர்தல் பிரசாரத்தை, பழனிசாமி துவக்கினார்.

ஏப்., 5ல், ஆத்துார், கள்ளக்குறிச்சியில் பிரசாரம் செய்வதாக இருந்த நிலையில், ஏப்.,14க்கு மாற்றப்பட்டது. தமிழ்ப்புத்தாண்டான நேற்று முன்தினம், சேலம் மாவட்டம், ஆத்துாரில், ராகு காலம் மற்றும் புதன் ஓரை நேரத்தில், கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுருவை ஆதரித்து, பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா பாணியில், ராகு காலத்தில், பிரசாரம் செய்துள்ளதால், அவருக்கு ராஜயோகம் கிடைக்கும் என, ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

விசேஷ பூஜை



இதுகுறித்து, ஜோதிடர்கள் கூறியதாவது:

ராகு கால நேரத்தில் நல்ல காரியங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பது பொதுவான கருத்து. ஆனால், அந்த நேரத்தில் விசேஷ பூஜை செய்து, வேண்டிய வரத்தினை பெறுவ தற்கான நல்ல நேரம் ஆகும்.

தமிழ்ப்புத்தாண்டான, 14ல், மாலை, 4:30 முதல், மாலை, 6:00 மணி வரை, ராகு காலம். அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி, அன்று ராகு காலம் மற்றும் புதன் ஓரை நேரமான, மாலை, 5:20 மணிக்கு மேல், 6:00 மணி வரை, பிரசாரம் செய்துள்ளார்.

பிரசாரம் துவங்கும் முன், தென்மேற்கு திசையில், மறைந்த முதல்வர்கள்எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களை வைத்து, மலர் துாவி வணங்கியுள்ளார். தென்மேற்கு திசை, ராகு பகவான் திசை. திருநாகேஸ்வரத்தில், ராகு பகவான், தென்மேற்கு திசையில் தான் உள்ளார்.

ஆத்துார், ராணிப்பேட்டையில், பிரசாரம் செய்த இடம், ஏற்கனவே விநாயகர் கோவில் இருந்த இடம்.

அந்த கோவில் இடிக்கப்பட்ட இடத்தில் மேடை அமைத்ததும், முன்னோர்களை வழிபாடு செய்ததும் நன்மையை தரும் என்பதால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படத்தை வைத்து வழிபாடு செய்துள்ளார்.

அவருக்கு, கன்னி ராசி,ஹஸ்தம் நட்சத்திரம் என்பதால், கன்னி ராசிக்கு ராகு காலம் யோகம் தரும். 27 நட்சத்திரங்களில், அதிர்ஷ்ட நட்சத்திரம் ஹஸ்தம். அவருக்கு தற்போது, 6ல், சனி பகவான் உள்ளதால், யோகம் தான் தரும். தவிர, மே 1ல், குருப்பெயர்ச்சியும் சாதகமாக மாறும் நிலைதான் என்பதால், ராஜயோகம் நிச்சயமாக கிடைக்கும்.

சாதகம்



கடந்த, 2014, லோக்சபா தேர்தலின்போது, மார்ச் 6ல், நாகை, மயிலாடுதுறையில், அ.தி.மு.க., பிரசாரம் மதியம், 12:00 முதல், 1:30 மணி என, குறிப்பிட்ட நிலையில், மதியம், 1:30 மணி முதல், 3:00 மணி வரை, ராகு காலத்தில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மூன்று இடங்களில் பிரசாரம் செய்தார்.

ராகு கால பிரசாரத்தால் அக்கட்சியினர் அச்சம் கொண்ட நிலையில், அத்தேர்தலில், 37 இடங்களில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா கனகதுர்கா கோவிலில், 2023, செப்., மாதம் எதிரிகளை வீழ்த்துவதற்காக, பழனிசாமி வழிபாடு செய்து வந்தார். இத்தேர்தலில் கூட, அ.தி.மு.க.,வுக்கு கட்சி மற்றும் சின்னம் பிரச்னை எழும் என்று கூறப்பட்ட நிலையில், அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, கட்சி சின்னம் கிடைத்துள்ளது, பழனிசாமிக்கு சாதகமாகத்தான் அமைந்தது.

இதனால், பூனையே பிரசாரத்தின் குறுக்கே போனாலும், பழனிசாமி எந்த சகுணத் தடையும் இன்றி தன்னுடைய பயணத்தைத் தொடரலாம்

இவ்வாறு கூறினர்.


K.Ramakrishnan - chennai, இந்தியா
16-ஏப்-2024 23:21 Report Abuse
K.Ramakrishnan பழனிசாமி அய்யா.. ஜோதிடத்தை நம்பாதீங்க.. ஸ்டாலினுக்கு கட்டம் சரியில்லை. அவர் சிஎம் ஆக முடியாது என்று அடித்துச் சொன்னார் எச். ராஜா. கடைசியில் என்ன ஆச்சு...? உங்க பதவி பறிபோய் விட்டது. இப்படியே உங்களைஉசுப்பேத்தி உசுப்பேத்தி ரணகளம் ஆக்கப் பார்ப்பாங்க... பேசாம பா.ஜ.வின் அடிமையாகவே இருந்துட்டு சிஎம் பதவியை காப்பாற்றி இருக்கலாமோ? என்ற நினைப்பு வருமே...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்