அது வானவில் கூட்டணி... மறைந்து போகும்: பிரேமலதா
"இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அது தான் கட்சிக்கு அங்கீகாரம். மற்றவர்கள் என்ன பேசினாலும் அ.தி.மு.க., சின்னம் இங்கு தான் உள்ளது" என, தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா பேசினார்.
அ.தி.மு.க., தேனி வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து பிரேமலதா பேசியதாவது:
விஜயகாந்த் மறைந்த சோகத்தில் இருந்து நாங்கள் மீளவில்லை. ஆனாலும், கூட்டணி தர்மத்துக்காகவும் பழனிசாமி கேட்டுக் கொண்டாதாலும் பிரசாரம் செய்ய வந்துள்ளேன்.
இந்த லோக்சபா தேர்தல் தர்மத்துக்கும் அதர்மத்துக்கும் இடையே நடக்கும் போராக உள்ளது. கணவரை இழந்த பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பது பெண்களுக்கு தெரியும்,
அ.தி.மு.க., கூட்டணிக்கு பிரசாரம் செய்ய எங்கு சென்றாலும் மக்களிடையே அமோக வரவேற்பு இருக்கிறது. அனைவரும் விரும்பும் கூட்டணியாக இந்த கூட்டணி அமைந்துள்ளது.
என் மகன் விஜய பிரபாகரனுக்காக ஏன் இதுவரையில் பிரசாரம் செய்ய போகவில்லை என பலரும் கேட்கின்றனர். என்னை பொருத்தவரை அனைத்து வேட்பாளர்களும் என் பிள்ளைகள் மற்றும் சகோதரர்கள் தான்.
தி.மு.க., மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். பா.ஜ., வை அகற்றவேண்டும் என்ற குறிக்கோளோடு மக்கள் உள்ளனர். 7, 8 பேர் உள்ள கூட்டணி தான் பெரிய கூட்டணி என்கிறார்கள். அவர்கள் வானவில் போல. வானவில் தோன்றியவுடன் மறைந்து போகிறதோ அதுபோல மறைந்து போகும் கூட்டணி.
இரட்டை இலை சின்னம் எங்கு இருக்கிறதோ அது தான் கட்சிக்கு அங்கீகாரம். மற்றவர்கள் என்ன பேசினாலும் அ.தி.மு.க., சின்னம் இங்கு தான் உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து