கனிமொழிக்கு எதிராக பிரசாரம்: அமைச்சர் சகோதரருக்கு எதிர்ப்பு
துாத்துக்குடி லோக்சபா தொகுதியில் தற்போதையஎம்.பி., கனிமொழி உள்ளிட்ட 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில், நாம் இந்தியர் என்ற கட்சியின் தலைவர் ராஜாவும் ஒருவர். இவர், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவனின் சகோதரர் ஆவார்.
துாத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில், கனிமொழிக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்ட ராஜா, தி.மு.க.,வை கடுமையாக விமர்சித்தார். ஆளுங்கட்சியான தி.மு.க., மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகளை வைத்து, பிரசாரம் செய்த ராஜா, நேற்று முன்தினம் இரவு கனிமொழி எம்.பி., வீடு அமைந்துள்ள குறிஞ்சி நகரில், ஓட்டு சேகரித்தார்.
அப்போது, கனிமொழிக்கு எதிராக பிரசாரம் செய்தார்; அவருக்கு துாத்துக்குடி பற்றி எதுவும் தெரியாது என, குறிப்பிட்டார். இதையறிந்த மற்றொரு இடத்தில் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தி.மு.க.,வினர், ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இவ்வாறு பல இடங்களில் நடந்தது. ராஜா பேச முற்பட்டபோது, தி.மு.க.,வினர் எதிர் கோஷம் எழுப்பினர். இதனால், அவர் அங்கிருந்து வேறு பகுதிக்கு நகர்ந்தார்.
வாசகர் கருத்து