திராவிட கட்சிகள் ஓட்டுக்கு பட்டுவாடா :இரவு முழுதும் விழித்திருந்த பெண்கள்
அ.தி.மு.க., -- தி.மு.க., கட்சிகள், ஓட்டுக்கு பணம் பட்டுவாடா செய்ததால், இரவு முழுதும் பெண்கள் வாசலில் காத்திருந்து வாங்கி சென்றனர்.
தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட வேட்பாளர்கள், நேற்று முன்தினம் காலை முதல், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடாவை துவக்கினர். அ.தி.மு.க., மற்றும் தி.மு.க., ஆகிய இரு கட்சியினர் தான், இதில் மும்முரமாக ஈடுபட்டனர். தி.மு.க., சார்பில், ஓட்டுக்கு தலா, 300 ரூபாய், 70 சதவீதமும், அ.தி.மு.க., சார்பில் ஓட்டுக்கு, 200 ரூபாய் வீதமும் கொடுக்கப்பட்டது. பெரம்பலுார் போன்ற சில தொகுதிகளில், கூடுதலாக வழங்கப்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபை தொகுதிகளும், திருச்சி, பெரம்பலுார், கரூர் ஆகிய லோக்சபா தொகுதிகளில் உள்ளன. நேற்று முன்தினம் காலை முதல், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும், திருச்சி மாவட்டத்தில் உள்ள, ஒன்பது சட்டசபைத் தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா செய்தன. பா.ஜ., சார்பிலும், அக்கட்சியினர் மற்றும் நடுநிலை வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா நடப்பதாகவும் தகவல் வெளியானது.
இதனால், நேற்று முன்தினம் திருச்சி மாவட்டத்தில், இரவு முழுதும் வீட்டு வாசலில் துாங்காமல் காத்திருந்து, கட்சியினர் பணம் கொடுக்க வருகின்றனரா என்று பெண்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி காத்திருந்த பலருக்கு பணம் கிடைத்தது. சில ஊர்களில் கிடைக்கவில்லை. நேற்று காலை வரை அ.தி.மு.க., - தி.மு.க.,வின் பணப்பட்டுவாடா கனஜோராக நடந்தது. இதை கண்டுபிடிக்க வேண்டிய அதிகாரிகளோ, கண்டிப்பான அதிகாரிகள் போல், சாலையில் வாகனங்களை நிறுத்தி சோதனை செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்பட்டனர்.
வாசகர் கருத்து