மோடி கூட்டணி அரசில் துறைகள் ஒதுக்கீடு!
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி, நேற்று முன்தினம் பதவியேற்ற நிலையில், அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. முக்கிய பதவிகள் கேட்டு, கூட்டணி கட்சிகள் மோதிய நிலையில், அனைத்தையும் பா.ஜ., தக்க வைத்துள்ளதால், அவை கப்சிப் ஆகின.
கூட்டணி ஆட்சியின் முதல் அமைச்சரவை கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கான துறைகள் நேற்று மாலை ஒதுக்கப்பட்டன. வழக்கமாக, பதவி ஏற்பு விழா முடிந்ததுமே, அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடு அறிவிக்கப்படும்.
எதிர்பார்த்தன
இந்த தடவை அவ்வாறு அறிவிக்காததால், துறைகள் பங்கீடு செய்வதில் பிரச்னை நிலவுவதாக செய்திகள் வெளிவந்தன.
நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் ஆகியவை அதிகமான அமைச்சர் பதவிகளை எதிர்பார்த்தன.
உள்துறை, நிதி, ரயில்வே, வேளாண்மை என்று முக்கியமான துறைகளை கேட்டு அழுத்தம் கொடுத்தன. ஆனால், அமைச்சரவை கூட்டத்தை தனது இல்லத்தில் நடத்திய பிரதமர் மோடி, கூட்டணி கட்சிகளின் நிர்பந்தம் எந்தளவுக்கு நியாயமற்றது என்பதை எடுத்துச் சொல்லியுள்ளார்.
அதிகபட்ச எம்.பி.,க்களை கொண்ட கட்சியே முக்கிய இலாகாக்களை நிர்வகிப்பது காலம் காலமாக தொடரும் மரபு என்பதை சுட்டிக் காட்டி, அதிலிருந்து மாற அழுத்தம் கொடுத்தால், விளைவுகள் ஒட்டுமொத்தமாக அனைவரையும் பாதிக்கும் என எச்சரித்துள்ளார்.
'பா.ஜ., ஆட்சி வேண்டாம் என்பது மக்களின் விருப்பம். அந்த விருப்பத்தை நிறைவேற்றும் பொறுப்பு காங்கிரசுக்கு இருக்கிறது. ஆகவே, உரிய நேரம் வரும்போது அதற்கு தேவையான நடவடிக்கை எடுப்போம்' என கார்கே பேசி இருப்பதை மோடி நினைவுபடுத்தியுள்ளார். இதனால், கூட்டணி கட்சிகள் வாயடைத்து போயின.
அதே நேரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், 11 அமைச்சர்கள் பதவிகளை அவற்றுக்கு பிரதமர் வழங்கினார்.
சந்திரபாபு நாயுடு மற்றும் நிதீஷ் குமாரின் கட்சிகளுக்கு, தலா இரண்டு அமைச்சர் பதவியும், மற்ற கட்சிகளுக்கு, தலா ஒரு பதவியும் வழங்கப்பட்டன. மஹாராஷ்டிராவில் கூட்டணியில் உள்ள துணை முதல்வர் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்த வாய்ப்பை ஏற்கவில்லை.
அக்கட்சியின் பிரபுல் படேல் ஏற்கனவே மத்திய அமைச்சராக இருந்ததால், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர் பதவியை நிராகரித்தார். கேபினட் அமைச்சர் பதவி கிடைக்கும்வரை காத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
நட்டாவுக்கு சுகாதாரம்
புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் முடிந்ததும், யார் யாருக்கு எந்த துறைகள் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது.
கடந்த ஆட்சியில் முக்கிய துறைகளை வைத்திருந்த நான்கு முன்னணி அமைச்சர்களான ராஜ்நாத் சிங், அமித் ஷா, நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் அதே பொறுப்புகளில் தொடர்வர்.
மற்றொரு மூத்த அமைச்சர் நிதின் கட்கரியும் நெடுஞ்சாலை துறையை மீண்டும் பெற்றுள்ளார். பியுஷ் கோயலுக்கு வர்த்தகம் கிடைத்துள்ளது.
மோடியின் முதல் ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த பா.ஜ., தலைவர் நட்டாவுக்கு, அதே துறை தற்போது ஒதுக்கப்பட்டுள்ளது. ரசாயனம் மற்றும் உரத் துறைகளையும் கவனிப்பார்.
கடந்த ஆட்சியில் சுகாதார அமைச்சராக இருந்த மன்சுக் மாண்டவியா, தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரம் - விளையாட்டுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ள, ஹரியானா முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டாருக்கு, மின்சாரம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
அவரைப் போலவே, முதல் முறையாக மத்திய அமைச்சராகியுள்ள, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு, வேளாண் துறை வழங்கப்பட்டுள்ளது. அதனுடன் தொடர்புடைய விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையையும் அவர் கவனிப்பார்.
முருகனுக்கு செய்தி
கிரிண் ரிஜுஜு, பார்லிமென்ட் விவகாரத் துறையை கவனிப்பார். அந்தத் துறையை கவனித்து வந்த பிரஹலாத் ஜோஷி, உணவு, நுகர்வோர் நலன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கவனிப்பார். புபேந்திர யாதவ், தொடர்ந்து, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருப்பார். சி.ஆர். பாட்டீல், ஜலசக்தி துறையை கவனிப்பார்.
ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், செய்தி, ஒலிபரப்புத் துறையையும் கவனிப்பார். விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா, தொலைத் தொடர்பு, வடகிழக்கு பிராந்திய மேம்பாட்டு துறைகளை கவனிப்பார்.
தமிழகத்தை சேர்ந்த எல். முருகன், முன்பு கவனித்த செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் பதவியுடன், பார்லிமென்ட் விவகாரத்துறை இணையமைச்சராகவும் இருப்பார்.
மதச்சார்பற்ற ஜனதா தளத்தை சேர்ந்த கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, கனரக தொழில்கள் மற்றும் உருக்குத் துறையை கவனிப்பார்.
பீஹார் முன்னாள் முதல்வரும், ஹிந்துஸ்தான் அவாம் மோர்ச்சா தலைவருமான ஜிதன் ராம் மஞ்சி, குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் அமைச்சராக இருப்பார். ஐக்கிய ஜனதா தளத்தின் லாலன் சிங் என்றழைக்கப்படும் ராஜிவ் ரஞ்சன் சிங், பஞ்சாயத்து ராஜ் அமைச்சர். மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளம் துறைகளையும் கவனிப்பார்.
தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, விமான போக்குவரத்தை கவனிப்பார்.
லோக்ஜனசக்தி - ராம்விலாஸ் பாஸ்வான் கட்சியின் சிராக் பாஸவானுக்கு, உணவு பதப்படுத்துதல் துறை கொடுக்கப்பட்டு உள்ளது.
வீணடிக்கவில்லை
ராஷ்ட்ரீய லோக் தளத்தின் ஜெயந்த் சவுத்ரி, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் துறைகளின் தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சராக இருப்பார். மேலும், கல்வித் துறையின் இணையமைச்சராகவும் இருப்பார்.
இந்திய குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அதாவலே, சமூக நீதித் துறை அமைச்சராக தொடர்கிறார்.
'நேரத்தை வீணடிக்காமல், எந்த வெளி சச்சரவுகளையும் கண்டுகொள்ளாமல், அமைச்சர்களுக்கு விரைவாக துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தன் இலக்கை நோக்கி, இந்த கூட்டணி பயணிக்கும் என்பதை, துவக்கத்திலேயே பிரதமர் மோடி உணர்த்தி உள்ளார்' என கட்சி நிர்வாகிகள் கூறினர்.
மத்திய அமைச்சர்களுக்கான இலாகாக்கள் விபரம்
கேபினட் அமைச்சர்கள்
1
நரேந்திர மோடி பணியாளர் நலன், ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி, பொதுமக்கள்
குறை தீர்வு, அனைத்து கொள்கை முடிவுகள், மற்ற அமைச்சர்களுக்கு
ஒதுக்கப்படாத துறைகள். -
2 ராஜ்நாத் சிங் ராணுவம் -
3 அமித் ஷா உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை
4 நிதின் கட்கரி- சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை
5 நட்டா- சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரம்
6 சிவ்ராஜ் சிங் சவுகான் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன், ஊரக மேம்பாடு
7 நிர்மலா சீதாராமன் நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்கள்
8 ஜெய்சங்கர் வெளியுறவுத்துறை
9 மனோகர் லால் கட்டார் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரம்; மின்சாரம்
10 குமாரசாமி கனரக தொழிற்சாலைகள், உருக்கு
11 பியுஷ் கோயல் வர்த்தகம் மற்றும் தொழில்துறை
12 தர்மேந்திர பிரதான் கல்வித் துறை
13 ஜிதன் ராம் மஞ்சி குறு, சிறு, நடுத்தர தொழில்துறை
14 லாலன் சிங் பஞ்சாயத்து ராஜ், மீன் வளம், கால்நடை மற்றும் பால்வளம்
15 சர்பானந்த சோனோவால் துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து
16 வீரேந்திர குமார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் -
17 ராம் மோகன் நாயுடு விமான போக்குவரத்து
18 பிரகலாத் ஜோஷி நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வினியோகம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-
19 ஜுவல் ஓரம் பழங்குடியினர் விவகாரத்துறை
20 கிரிராஜ் சிங் ஜவுளித்துறை
21 அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே, செய்தி மற்றும் ஒலிபரப்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
22 ஜோதிராதித்ய சிந்தியா -தகவல்தொடர்பு, வடகிழக்கு பிராந்திய மேம்பாடு
23 பூபேந்திர யாதவ் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம்
24 கஜேந்திர சிங் ஷெகாவத் கலாசாரம், சுற்றுலா -
25 அன்னபூர்ணா தேவி பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
26 கிரண் ரிஜிஜு பார்லிமென்ட் விவகாரம், சிறுபான்மையினர் விவகாரம்
27 ஹர்தீப் சிங் பூரி பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
28 மன்சுக் மாண்டவியா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு -
29 கிஷன் ரெட்டி நிலக்கரி மற்றும் சுரங்கம்
30 சிராக் பஸ்வான் உணவு பதப்படுத்துதல்
31 சி.ஆர்.பாட்டீல் ஜல் சக்தி
தனி பொறுப்பு
1 ராவ் இந்திரஜித் சிங் புள்ளியியல் மற்றும் செயலாக்கம், திட்டம் (தனி பொறுப்பு)
கலாசாரம் (இணையமைச்சர்)
2 ஜிதேந்திர சிங் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், புவி அறிவியல் (தனி பொறுப்பு)
பிரதமர் அலுவலகம், பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்வு மற்றும் ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி (இணையமைச்சர்)
3 அர்ஜுன் ராம் மேக்வால் - சட்டம் மற்றும் நீதி (தனி பொறுப்பு), பார்லிமென்ட் விவகாரங்கள் (இணையமைச்சர்)
4 பிரதாப் ராவ் ஜாதவ் ஆயுஷ் (தனி பொறுப்பு) சுகாதாரம் மற்றும் குடும்ப நலன் (இணையமைச்சர்)
5 ஜெயந்த் சவுதிரி திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் (தனிப்பொறுப்பு), கல்வி (இணையமைச்சர்)
இணை அமைச்சர்கள்
1 ஜிதின் பிரசாதா -வர்த்தகம் மற்றும் தொழில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
2 ஸ்ரீபாத் யசோ நாயக் மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி-
3.பங்கஜ் சவுதிரி நிதி -
4.கிருஷண் பால் -கூட்டுறவு
5. ராம்தாஸ் அத்வாலே சமூக நீதி மற்றும் அதிகாரம் அளித்தல்
6. ராம்நாத் தாக்குர் வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
7. நித்யானந்த் ராய் உள்துறை -
8. அனுப்ரியா படேல் சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், ரசாயனம் மற்றும் உரம்
9.வி.சோமன்னா -ஜல் சக்தி மற்றும் ரயில்வே
10. சந்திரசேகர் பெமசானி ஊரக மேம்பாடு மற்றும் தகவல் தொடர்பு
11. எஸ்.பி.சிங் பகேல் பஞ்சாயத்து ராஜ், மீன் வளம், கால்நடை மற்றும் பால்வளம்
12.ஷோபா கரந்லாஜே -குறு, சிறு, நடுத்தர தொழில்துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு
13.கீர்த்தி வர்தன் சிங் சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம், வெளியுறவு -
14. பி.எல்.வர்மா நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொது வினியோகம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
15. சாந்தனு தாக்குர் துறைமுகம், கப்பல், நீர்வழி போக்குவரத்து
16.சுரேஷ் கோபி சுற்றுலா, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு
17.முருகன் செய்தி மற்றும் ஒலிபரப்பு, பார்லிமென்ட் விவகாரம்
18.அஜய் தம்டா சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்-
19. பந்தி சஞ்சய் குமார் - உள்துறை
20. கமலேஷ் பாஸ்வான் -ஊரக மேம்பாடு
21.பாகிரத் சவுத்ரி - வேளாண் மற்றும் விவசாயிகள் நலன்
22. சதீஷ் சந்திர துபே -நிலக்கரி மற்றும் சுரங்கம்
23. சஞ்சய் சேத் -ராணுவம்
24. ரவ்னீத் சிங் உணவு பதப்படுத்துதல், ரயில்வே -
25.துர்கா தாஸ் உக்கே பழங்குடியினர் விவகாரம் -
26.ரக்ஷா நிகில் கட்சே இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு -
27.சுகந்த மஜும்தார் கல்வி, வடகிழக்கு பிராந்திய மேம்பாடு
28.சாவித்ரி தாக்குர் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு
29.தோகன் சாஹு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரம் -
30.ராஜ் பூஷண் சவுதிரி ஜல் சக்தி -
31. பூபதி ராஜு ஸ்ரீநிவாஸ் வர்மா கனரக தொழிற்சாலை, உருக்கு -
32. ஹர்ஷ் மல்ஹோத்ரா பெருநிறுவன விவகாரங்கள், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் -
33.நிமுபென் பாமனியா நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகம் -
34.முரளிதர் மொகுல் கூட்டுறவு, விமான போக்குவரத்து
35.ஜார்ஜ் குரியன் சிறுபான்மையினர் விவகாரங்கள், மீன் வளம், கால்நடை மற்றும் பால்வளம்
36. பவித்ரா மார்கரிட்டா வெளியுறவு, ஜவுளித்துறை
வாசகர் கருத்து