பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமா: ஜெய்சங்கர் பதிலடி

"அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனா பெயரை மாற்றுவதால் அது அவர்களுக்கு சொந்தமாகிவிடாது" என, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மீது சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அங்குள்ள நிலங்களுக்கெல்லாம் புதிய பெயர்களை சூடி, தங்கள் வரைபடத்தில் சீனா சேர்த்தது. இந்த சம்பவத்துக்கு இந்தியா கடும் கண்டனங்களை தெரிவித்தது.

முதலில், அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 6 இடங்களின் பெயர்களையும் அடுத்து 15 இடங்களின் பெயர்களையும் 2023ல் 11 இடங்களின் பெயர்களையும் சீனா மாற்றியது. தற்போது 30 இடங்களின் பெயர்களை சீனா மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதில், குடியிருப்புகளும் ஆறுகள், ஏரி, மலைப்பகுதிகள் ஆகியவை அடங்கும். இவற்றுக்கு சீனாவின் மாண்டரின் மொழியில் புதிய பெயர்களை சூட்டியுள்ளது.

சீனாவின் அத்துமீறல் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது:

அருணாச்சல பிரதேசம் எப்போதும் இந்தியாவின் ஓர் அங்கம் தான். எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே நமது ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 30 இடங்களுக்கு பெயரை மாற்றினால் அது சீனாவுக்கு சொந்தமாகிவிடாது. அருணாச்சல பிரதேசத்தில் நமது ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் இன்றும் நேற்றும் நாளையும் தொடரும்.

நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது. சீனாவின் செயல்கள், எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.

அவ்வாறு அவர் தெரிவித்தார்.


Ramu - Birmingham, யுனைடெட் கிங்டம்
02-ஏப்-2024 13:46 Report Abuse
Ramu //நீங்கள் வசிக்கும் வீட்டை என் பெயருக்கு மாற்றிவிட்டால் அது எனக்கு சொந்தமாகிவிடாது.// அது எப்படி? தன்னைத்தானே சமாதானம் செய்துகொள்ளாமல், சீனாவுக்கு இந்தியா தனது பலத்த எதிர்ப்பையும் கண்டனத்தையும் தெரிவிக்க வேண்டும்.
sethu - Chennai, இந்தியா
02-ஏப்-2024 11:55 Report Abuse
sethu சீனாவின் பெய்ஜிங் நகரை நாமும் பன்றிகள் நகர் என பெயர் மாற்றிடுவம். அடுத்து திபெத் பெயர் உத்தமர் பூமி ,அப்புறம் ஜிஜியன் பகுதிக்கு சீனவிஷம் பரப்பி நகர் என நமக்கான நகர் களின் பெயராக மாற்றுவம் .
beindian - doha, கத்தார்
02-ஏப்-2024 10:33 Report Abuse
beindian யாருமே தனக்கு சொந்தமான பொருள்களுக்குத்தான் பேர் வைப்பார்கள் இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமலிருப்பதேன்
rsudarsan lic - mumbai, இந்தியா
02-ஏப்-2024 07:46 Report Abuse
rsudarsan lic பதிலுக்காக சீன நகரங்களின் பெயர்களை மாற்றுவோம் ரொவுடிக்கு ரவடிதான் தேவை
M.Malini - Perak, மலேஷியா
02-ஏப்-2024 06:00 Report Abuse
M.Malini சுயபாஸ் sir.
Anantharaman Srinivasan - chennai, இந்தியா
01-ஏப்-2024 22:55 Report Abuse
Anantharaman Srinivasan ஆக மொத்தம் அருணாசல பிரதேசத்தில் 62 இடங்களுக்கு சீனா பெயரை மாற்றியுள்ளளது. உன் பிள்ளைக்கு பக்கத்து வீட்டுகாரன் பெயர் மாற்றம் செய்ய விடலாமா..?? குஜராத் தொழிற்சாலைகளுக்கு தேவையான மூலப்பொருட்களை சீனா சீப்பாக சப்ளை செய்வதே இந்தியா எதிர்வினையாற்ற முடியாமல் மௌனமாய் இருப்பதற்கு காரணம்.
Priyan Vadanad - Madurai, இந்தியா
01-ஏப்-2024 22:16 Report Abuse
Priyan Vadanad பேச்சிலதான் வீரம் கொப்புளிக்குது. பொய்யிலதான் மகுடம் சாந்தி சிரிக்குது. ஒருத்தர் பிள்ளைக்கு இன்னொருவர் பேர் வைக்கிறார் என்றால் அவரிடம் குழந்தையை ஒப்படைத்துவிட்டோம் என்றுதான் பொருள். இத்தனை நாள் ஏன் இந்த வீராவேசம்?
Dharmavaan - Chennai, இந்தியா
01-ஏப்-2024 19:28 Report Abuse
Dharmavaan திபெத் சீனாவுக்கு சொந்தமல்ல என்று இந்தியா ஏன் சொல்லவில்லை
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்