'டெல்டாகாரன்' என டிராமா ஸ்டாலின் மீது பாயும் பிரேமலதா
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில், தே.மு.தி.க., வேட்பாளர் சிவநேசனை ஆதரித்து, நேற்று தே.மு.தி.க, பொதுச்செயலர் பிரேமலதா பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்ந்து விட்டது. சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை எல்லாம் உயர்ந்து விட்டன. நுாறு நாள் வேலை திட்டத்தில், பெண்களுக்கு முறையாக வேலை இல்லை.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லை; வறுமை தான் உள்ளது. எங்கு பார்த்தாலும் கஞ்சா, தெருவுக்கு நாலு டாஸ்மாக், லாட்டரி இதெல்லாம் யாருக்கு தேவை. மக்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு தரவில்லை. தி.மு.க., - பா.ஜ., அரசுக்கு பாடம் புகட்ட வேண்டும்.
பிரதமர் மோடி ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவேன் என கூறினார். ஆனால், இதுவரை யாருக்கும் தரவில்லை. காஸ் சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து விட்டன. மீத்தேன் திட்டம் கொண்டு வந்து விவசாய நிலங்களை அழிக்க பார்த்தனர்.
ஆனால், பாதுகாக்கப்பட்ட வேளாண் சட்டத்தை பழனிசாமி கொண்டு வந்து, விவசாய நிலங்களில் இனி யாரும் கை வைக்க முடியாத நிலையை உருவாக்கினார்.
கச்சத்தீவு, காவிரியில் உரிமை என எல்லாவற்றையும் தி.மு.க., விட்டுக் கொடுத்தது. இப்படி செய்து விட்டு நீலிக் கண்ணீர் வடிக்கிறார் ஸ்டாலின். இந்த லட்சணத்தில் நானும் டெல்டாகாரன் என டிராமா போடுகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
வாசகர் கருத்து