Advertisement

பழனிசாமிக்கு 3வது இடமாவது கிடைக்குமா: டி.டி.வி.தினகரன் கேள்வி

"ராமநாதபுரத்தில் தி.மு.க.,வுக்கு எதிரான வாக்குகளை பெறக்கூடாது என்பதால் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக பழனிசாமி வேட்பாளரை நிறுத்தியுள்ளார்" என, அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் பேசினார்.

ராமநாதபுரம் வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து டி.டி.வி.தினகரன் பேசியதாவது:

பிரதமர் மோடி தலைமையில் தி.மு.க.,வை எதிர்த்து போராடுகிறோம். மூன்றாவது முறையாக பிரதமராக வர உள்ள மோடிக்கு வாக்களிப்பதன் வாயிலாக தமிழகத்திற்கு தேவையான திட்டங்களை பெற்றுத் தருவோம்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமர் வேட்பாளராக மோடி இருக்கிறார். தி.மு.க., கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என நீங்கள் கேட்க வேண்டும்.

இந்த தொகுதிக்கு தேவையான திட்டங்களை பிரதமரிடம் உரிமையுடன் பன்னீர்செல்வம் கேட்டுப் பெறுவார். மோடிக்கு இணையான வேட்பாளர் என்று சொல்லும் அளவுக்கு இண்டியா கூட்டணியில் யாரும் இல்லை. பழனிசாமி இரட்டை இலையை தூக்கிக் கொண்டு அலைகிறார். தேனியில் அவர் பேசும்போது, என்னை பச்சோந்தி என்கிறார். பச்சோந்தி யார் என்பது மக்களுக்கு தெரியும்.

டில்லியில் 4 மாதங்களுக்கு முன் நடந்த கூட்டத்தில்கூட பிரதமருடன் அமர்ந்து கொண்டு, '330 இடங்களில் பா.ஜ., ஜெயிக்கும்' என்றார். இன்று அவரை தேனி மக்களே, 'பச்சை துரோகி' என விமர்சிக்கின்றனர்.

தமிழகத்துக்கு தீமையான திட்டங்களை எதிர்க்கவும் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் தான் முன்பு பா.ஜ.,வை எதிர்த்தேன். தேனியில் பழனிசாமி ஓட்டுக்கு ஆயிரம் தந்தாலும் மூன்றாவது இடத்தையாவது தாண்ட முடியுமா?

ராமநாதபுரத்தில் தி.மு.க.,வுக்கு எதிரான வாக்குகளை பெறக்கூடாது என்பதால் ஓட்டுகளைப் பிரிப்பதற்காக பழனிசாமி வேட்பாளரை நிறுத்தியுள்ளார். எம்.ஜி.ஆரை எதிர்த்துப் போட்டி போட்டவரின் மகனை இன்று வேட்பாளராக பழனிசாமி நிறுத்தி இருக்கிறார்.

இவ்வாறு அவர் பேசினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்