சென்னையில் பிரதமரின் 'ரோட் ஷோ': 20 நிபந்தனைகளுடன் போலீஸ் அனுமதி
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னையில் நாளை (ஏப்.,9) பிரதமர் மோடி பங்கேற்கும் 'ரோடு ஷோ'வுக்கு போலீசார் 20 நிபந்தனைகளை விதித்து அனுமதித்துள்ளனர்.
தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதன் ஒருபகுதியாக சென்னை தி.நகரில் நாளை பிரதமர் மோடியின் வாகன பேரணி (ரோடு ஷோ) நடக்க இருக்கிறது. இதனால் தி.நகர் பகுதியில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ட்ரோன்கள் பறக்க சென்னை போலீஸ் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இந்த 'ரோடு ஷோ'வுக்கு சென்னை போலீஸ் 20 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியுள்ளது.
நிபந்தனைகள்
* பிரதமரின் ரோடு ஷோவின்போது தொண்டர்கள் பட்டாசு வெடிக்கக் கூடாது
* வெறுப்புணர்வை தூண்டும் வகையில் முழக்கங்களை எழுப்பக் கூடாது
* பிரதமரின் ரோடு ஷோவின்போது உரையாற்றவும் அனுமதியில்லை
* மத நம்பிக்கைகளை காயப்படுத்தும் வகையிலும் வெறுப்புணர்வு தூண்டும் வகையிலும் முழக்கங்கள் எழுப்பக் கூடாது
* குண்டு துளைக்காத வாகனங்களை மட்டுமே பிரதமர் ரோடு ஷோவில் பயன்படுத்த வேண்டும்
* பேனர், கட் அவுட்கள் உள்ளிட்டவற்றை வைக்கக் கூடாது
* அனுமதிக்கப்பட்ட பாதையில் மட்டுமே ரோடு ஷோ நடத்த வேண்டும்; வேறு எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது
* தோல் பை, தண்ணீர் பாட்டில் போன்ற எளிதில் தூக்கி எறியக்கூடிய வகையிலான பொருட்கள் எடுத்து வரக்கூடாது
* மரத்தால் ஆன கைப்படியிடன் கூடிய பதாகைகள் எடுத்து வரக்கூடாது
* அலங்கார வளைவுகள் அமைக்க கூடாது.
உள்ளிட்ட 20 நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. நிபந்தனைகள் மீறப்பட்டால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து