பா.ஜ.,வில் சேரும் போலீஸ் அதிகாரிகள்
தமிழகத்தில், தி.மு.க., - அ.தி.மு.க., மாறி, மாறி ஆளுங்கட்சியாக இருந்து வருகின்றனர். இதனால், போலீஸ் துறையில் பணியாற்றி வரும் பெரும்பாலானோர், இக்கட்சிகளின் ஆதரவாளராக இருப்பர். ஆனால், வெளியில் காட்டி கொள்ள மாட்டார்கள். தேர்தலில் ஓட்டு போடுவதுடன் ஒதுங்கி கொள்வர்.
ஆனால், நீலகிரி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளாக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரிகள் பெரும்பாலும், பா.ஜ.,வில் இணைந்து, நேரடி அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.
பணிக்காலத்தில் மக்களோடு நெருங்கி பழகி, அவர்களின் மனநிலை அறிந்த போலீசார், ஓய்வுக்கு பின், பா.ஜ.,வில் சேர்வது, திராவிட கட்சிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
அவர்களில் சிலரிடம், ஓய்வுக்குப் பின் ஏன் இந்த மாற்றம் என்ற கேள்விக்கு, 'திராவிட கட்சிகளில் சேர்ந்தால், கட்சியில் வளர முடியாது. ஆனால் பா.ஜ.,வில் அந்த நிலை இல்லை. தகுதி இருந்தால், நல்ல நிலைக்கு வந்து மக்களுக்கு சேவை செய்ய முடியும்' என்றனர்.
வாசகர் கருத்து