'ஜிப்பா, தொளதொள பேன்ட்' பிரசாரத்தில் சீமான் கலகல
சென்னையில், நாம் தமிழர் கட்சியின் மத்திய சென்னை வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து, சீமான் பேசியதாவது:
மருத்துவத்தையும், கல்வியையும் இலவசமாக வழங்குவதாக ஆட்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் யாரும், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது இல்லை.
அரசியல்வாதிகள் முதல் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் வரை தங்களது குழந்தைகளை, அரசு பள்ளிகளில் சேர்ப்பது இல்லை. இதில் இருந்தே, அரசு மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் தரமில்லை என்பது தெரிகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், பிரிட்டனில் உள்ளவர்கள் தரமான சிகிச்சை, கல்வி பெறுவதற்கு, தமிழகம் வரும் நிலையை உருவாக்குவோம்.
கடந்த 13 ஆண்டுகளாக கட்சி துவங்கி புத்தம் புதிய டிசைன்களில் ஆடைகளை விற்கிறோம். ஆனால், அதை வாக்காளர்கள் வாங்குவதில்லை.
பழைய ஜிப்பா, தொளதொள பேன்டைத்தான் வாங்குகின்றனர். இந்த தேர்தலை சாதாரணமான தேர்தலாகக் கடந்து விடாமல், அடிப்படை அரசியல் மாற்றத்திற்காக, நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வீட்டிற்கு ஒரு 'கார்'
திண்டுக்கல்லில் அவர் பேசியது:
நாம் தமிழர் கட்சி வென்றால் வீட்டிற்கு ஒரு கார் தருகிறேன். (சில வினாடிகள் பேச்சை நிறுத்தினார். கூட்டத்தினரும் வியப்புடன் பார்த்தனர். தொடர்ந்து பேசினார்.) நான் வென்றதுமே கார் கேட்பீர்கள். அப்போது வீட்டிற்கு ஒரு அம்பேத்'கார்' படத்தையும், அவரது சிந்தனை புத்தகங்களையும் நிறைய தருவேன்.
இவ்வாறு தனது பரிசு புதிரை விடுவித்தார் சீமான்.
வாசகர் கருத்து