மேடையில் கலங்கிய அண்ணாமலை: கடைசி நாள் பிரசாரத்தில் உருக்கம்
கோவையில் முதியோர் இல்லத்தில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசும் போது கண்கலங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லோக்சபா தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோவை கஸ்தூரி நாயக்கன் பாளையத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில், "என் மண் என் மக்கள் யாத்திரை முடிந்த உடன் லோக்சபா தேர்தல் வந்துவிட்டது. இங்கு போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள முதியோர்களுடன் மாலை நேரத்தில் அமர்ந்து பேச வேண்டும் என கடந்த ஓராண்டாகவே முயற்சிகளை மேற்கொண்டேன். ஆனால், அதற்கு நேரம் கிடைக்கவில்லை.
தேர்தல் பிரசாரம் செய்வதற்கு இன்று கடைசி நாள். அதனால் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என நினைத்தேன். அதற்கான பாக்கியம் கிடைத்துள்ளது" எனப் பேசிக் கொண்டிருக்கும் போதே கண்கலங்கினார்.
அவரைத் தேற்றும் வகையில் அங்கிருந்தவர்கள், 'ஜெய் ஸ்ரீராம்' என முழக்கங்களை எழுப்பினர்.
வாசகர் கருத்து