திருமாவளவன் பிரசாரத்தில் மோதல் புவனகிரி அருகே போலீசார் தடியடி
புவனகிரி அருகே திருமாவளவன் பிரசாரத்தில் மோதலில் ஈடுபட்ட வி.சி., கட்சியினரை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
சிதம்பரம் லோக்சபா தொகுதி தி.மு.க., கூட்டணி யின் வி.சி., வேட்பாளர் திருமாவளவன், நேற்று முன்தினம் இரவு, புவனகிரி ஒன்றிய பகுதிகளில் ஓட்டு சேகரித்தார்.
மருதுாரில் அவர் ஓட்டு சேகரித்த போது, அங்கிருந்த வி.சி., கட்சியினர் சிலர் கிருஷ்ணாபுரம், நத்தமேடு, ஜெயங்கொண்டம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு பிரசாரம் செய்ய வருமாறு அழைத்தனர்.
அதற்கு திருமாவளவன், 'நேரம் குறைவாக உள்ளது. பிறகு வந்து சந்திக்கிறேன்' என்றார். அதை ஏற்க மறுத்தவர்கள் கிராமத்திற்கு வந்தே ஆக வேண்டும் என வற்புறுத்தினர். அவர்களை அதே கட்சியைச் சேர்ந்த சிலர் கண்டிக்கவே, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
மேலும் மருதுார் - ஜெயங்கொண்டம் சாலையில் மறியலில் ஈடுபட்டதால், திருமாவளவன் வேறு ஊருக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இரவு 9:00 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டோரை கலைந்து போகுமாறு கூறினர். அதனை அவர்கள் ஏற்காத தால், தடியடி நடத்திக் கலைத்தனர். அதன்பிறகு புவனகிரிக்கு வந்த திருமாவளவன், இரவு காலம் கடந்ததால், ஓட்டு கேட்காமல் திரும்பிச் சென்றார்.
வாசகர் கருத்து