மோடி...ஈ.டி... டாடி வந்தாலும் பயமில்லை: உதயநிதி

"தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்த பழனிசாமி, அவர்களிடம் விலை போய்விட்டார்" என, அமைச்சர் உதயநிதி பேசினார்.

வடசென்னை தி.மு.க., வேட்பாளர் கலாநிதி வீராசாமியை ஆதரித்து உதயநிதி பேசியதாவது:

கடந்த லோக்சபா தேர்தலில் நம் எதிரிகள் அனைவரும் ஒன்றாக இருந்தனர். -இந்த தேர்தலில் அவர்கள் தனித்தனியாக பிரிந்து வருகின்றனர். இந்தமுறை வெற்றி சுலபம் என நினைத்து விடக்கூடாது.

வட சென்னை பகுதிகளில் உள்கட்டமைப்பு பற்றாக்குறையை போக்கும் வகையில் 1000 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி திட்டஙகளை செயல்படுத்தி வருகிறோம்.

கொருக்குப்பேட்டை எழில்நகர் பகுதியில் மாநகராட்சி சார்பாக மேம்பாலம் அமைக்க 106 கோடி ரூபாயில் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதுபோல பல திட்டங்களை தி.மு.க., அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்த லோக்சபா தேர்தல் வாக்குறுதியாக, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து எண்ணுார் வரையில் ரயில் பாதை நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளோம்.

சென்னை மாநகரில் உள்ள பல இடங்களில் பட்டா வாங்குவதில் சிக்கல் நீடிக்கிறது. இதனை கவனித்து பிரச்னைகளை தீர்க்க முதல்வர் ஸ்டாலின் தனிக் குழுவை அமைத்துள்ளார்.

பிரதமர் மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு அவர் எதையும் செய்யவில்லை. தேர்தலுக்காக மட்டுமே தமிழகம் வந்து போகிறார் மோடி. தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் மத்திய அரசிடம் அடகு வைத்த பழனிசாமி, அவர்களிடம் விலை போய்விட்டார்.

அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர்களை ரெய்டு பயம் காட்டி அவர்களின் கட்டுப்பாட்டில் அடிமைகளாக வைத்து கொண்டனர். தி.மு.க., இதற்கெல்லாம் பயப்படாது. மோடி, ஈ.டி, டாடி என யார் வந்தாலும் நாங்கள் பயப்பட மாட்டோம்.

இவ்வாறு அவர் பேசினார்.


Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
04-ஏப்-2024 05:55 Report Abuse
Kasimani Baskaran நுணலும் தன் வாயால் கெடும் என்ற பழமொழிதான் ஞாபகத்துக்கு வருகிறது.
Suppan - Mumbai, இந்தியா
03-ஏப்-2024 16:22 Report Abuse
Suppan சனாதன வழக்கில் நிச்சசயம் உள்ளே போகப் போகிறீர்கள். அப்பொழுதுதான் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் போட்டியாக உளறுவது நிற்கும்.
A1Suresh - Delhi, இந்தியா
02-ஏப்-2024 18:37 Report Abuse
A1Suresh என்.ஐ.ஏவும் என்.சீ.பியும் வரப்போகின்றன. திராவிட கட்சிகளுக்கு திவசம் நடத்த போகின்றார்கள். முதலில் ஜாபர் சாதிக்.......அடுத்து அமீர் சுல்தான்.........அடுத்து இவர்தான்.
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்