பறக்கும் படை ஓரவஞ்சனை அரசியல்வாதிகள் தப்புவது ஏன்?
தேர்தலை ஒட்டி, வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதை கண்காணிக்கவும் தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுவினர் சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் அறிவிப்பிற்கு முன்பு வரை எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சிகளின் பிரதிநிதிகள், ஆளுங்கட்சி மட்டுமின்றி அனைத்து அரசியல் கட்சிகளின் பிரமுகர்களிடம், அலுவல் முறையில் தொடர்பில் இருந்த, நெருங்கி பழகிய அதிகாரிகள், தற்போது பறக்கும் படை அலுவலர்களாக பணியாற்றுகின்றனர். அதனால், அரசியல்வாதிகளின் வாகனங்களை சோதனை செய்வதில், தயங்குவதாக கூறப்படுகிறது.
அதையும் மீறி சோதனையிட்டால், தேர்தலுக்கு பின், தங்களின் அலுவலகப் பணிகளுக்கு நெருக்கடிகள் வரலாம் என்ற அச்சத்திலேயே பறக்கும் படை அலுவலர்கள், அரசியல்வாதிகளின் வாகனங்களை சோதனை செய்வதில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து பறக்கும் படை அலுவலர்கள் கூறியதாவது:
தேர்தல் பறக்கும் படை அலுவலராக பணிபுரிவோரை, அதே சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நியமிக்கக் கூடாது. 10 அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை அலுவலர்களை மாற்றம் செய்ய வேண்டும். தேர்தல் பணி முடிந்த பின், அரசியல்வாதிகளால் பழிவாங்கப்படாமல் இருக்க, தேர்தல் ஆணையம் உறுதி வழங்க வேண்டும். அப்படி செய்தால், கண்காணிப்பு பணிகள் சிறப்பாக நடக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து