ஓட்டு எண்ணிக்கை மையத்தில் அடிப்படை வசதி: பா.ஜ., மனு
திருப்பூர்:பா.ஜ., திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
ஓட்டு எண்ணும் நாள் அன்று, மையத்தில் ஓட்டு எண்ணிக்கை முகவராக மகளிர் கலந்து கொள்கின்றனர். அவர்களுக்கு ஓட்டு எண்ணிக்கையை பார்வையிட உரிய இடம் ஒதுக்கி கொடுக்க வேண்டும். பெண்களுக்கு தனியாக கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். வெயில் காலம் என்பதால், கூடுதலான மின் விசிறிகள், போதுமான குடிநீர் வழங்க வேண்டும். தேனீர் மற்றும் உணவுகூடம், ஓட்டு எண்ணும் மையத்துக்கு தனித்தனியாக ஏற்பாடு செய்து கொடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து