அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்ட பட்டியல்
பிரசாரத்திற்கு செல்வோர் மீது தடியடி நடத்துவது, தேர்தல் அலுவலகம் மற்றும் பிரசாரத்திற்கு அனுமதி தராதது என, தங்களின் தேர்தல் பணிகளை முடக்கும் வகையில் அதிகாரிகளும், போலீஸ் அதிகாரிகளும் செயல்படுவதாக, பா.ஜ., புகார் தெரிவித்து வருகிறது.
தன்னுடைய போன் ஒட்டுக் கேட்கப்படுவதாக, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையும் குற்றச்சாட்டு தெரிவித்தார். பா.ஜ.,வுக்கு எதிராக செயல்படும் அதிகாரிகள் மற்றும் அவர்களின் பின்னணி விபரங்களை, அக்கட்சியினர் சேகரித்து வைத்துள்ளனர்.
மதுரை உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நேற்று மாலை மதுரை வந்தார்.
தேர்தல் பணிகள் தொடர்பாக, தமிழக பா.ஜ., முக்கிய நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அவரிடம், பா.ஜ., வேட்பாளர்களின் பணிகளை முடக்கும் வகையில் செயல்படும் அதிகாரிகளின் பட்டியலை, கட்சி நிர்வாகிகள் வழங்கினர்.
பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகள் மீது டில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிடம் புகார் அளிக்கவும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும் பா.ஜ., முடிவு செய்துள்ளது.
வாசகர் கருத்து