மயிலாடுதுறை பிரசாரத்தை அண்ணாமலை தவிர்த்தது ஏன்?
மயிலாடுதுறை லோக்சபா தொகுதியில், தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் வக்கீல் சுதா, பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் ஸ்டாலின், அ.தி.மு.க., பாபு, நாம் தமிழர் கட்சி காளியம்மாள் உள்ளிட்ட 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இருந்தும் இங்கு, அ.தி.மு.க., - பா.ம.க., - காங்., - நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களிடையே மட்டுமே கடும் போட்டி உள்ளது.
பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஸ்டாலின் தன் ஜாதி பலத்தை நம்பியும், தனிப்பட்ட செல்வாக்கை நம்பியும் களம் இறங்கியுள்ளார். தற்போது இவரை பிரசாரத்தில் முன்னணியில் உள்ளார். இந்நிலையில், பா.ஜ., மாநில தலைவர்அண்ணாமலை நேற்று முன்தினம் கடலுார், நாகை, தஞ்சை பகுதிகளில் பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
ஆனால் மயிலாடுதுறை தொகுதியில் பிரசாரம் செய்யாமல் தவிர்த்தார். இதற்கு காரணம், தருமபுரம் ஆதீனத்தை மிரட்டி பணம் கேட்ட வழக்கில் பா.ஜ., மாவட்ட தலைவர் அகோரம் கைது செய்யப்பட்டார். இதனால் தன் பிரசாரத்தால் சர்ச்சை ஏதேனும் ஏற்படாமல் இருக்கவே மயிலாடுதுறை தொகுதியில் அண்ணாமலைபிரசாரத்தை தவிர்த்ததாக பா.ஜ., தரப்பில் பேசப்பட்டு வருகிறது. ஆனாலும், பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல் அண்ணாமலை சென்றது, பா.ம.க., வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
வாசகர் கருத்து