'ஓசி' உணவு வேட்டை பறக்கும் படை அட்டூழியம்
பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு படையினர், உள்ளூர் போலீசார் மற்றும் வீடியோ கிராபருடன், அந்தந்த பகுதிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களால், வியாபாரிகள் நஷ்டமடைவதாக புகார் எழுந்துள்ளது.
வியாபாரிகள் கூறியதாவது:
பறக்கும் படையினர், டீ, சிகரெட், வடை, போண்டா, பஜ்ஜி, குடிநீர், பழரசம், இளநீர், பழங்கள் மற்றும் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை, பணி மேற்கொள்ளும் இடங்களில், கடைகளில் இருந்து வாங்கிக் கொள்கின்றனர்.
தினம் இரண்டு முதல், நான்கு முறைகளாவது, மேற்கண்ட உணவுகளை வாங்குகின்றனர்.
அவற்றிற்குரிய பணத்தை, பறக்கும் படையினர் கொடுக்க முயன்றாலும், குழுவில் இருக்கும் உள்ளூர் போலீசார், அவர்களை தரவிடாமல் தடுத்து, தங்கள் 'அதிகாரத்தை' காட்டி, பணம் கொடுக்காமல், கம்பி நீட்டி விடுகின்றனர்.
இந்த 'ஓசி' உணவு வேட்டையால், தினம் 1,200 ரூபாய் வரை, வருவாய் இழப்பு ஏற்படுகிறது. செங்குன்றம், சோழவரம், அம்பத்துார், ஆவடி, திருவேற்காடு என, திருவள்ளூர் மாவட்ட சுற்று வட்டாரங்களில் தொடரும், 'ஓசி' வசூல் வேட்டையை மாவட்ட தேர்தல் அலுவலர் தடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து