பெரியகுளம் தொகுதி, ம.நீ.ம., கூட்டணியில் போட்டியிடும் சமத்துவ மக்கள் கட்சி வேட்பாளருக்காக, அல்லிநகரத்தில் சரத்குமார் பிரசாரம் செய்தார். அப்போது, 'நான் வீடு, வீடாக சென்று பேப்பர் போட்டேன், மோட்டார் பைக் கடையில் வேலை செய்தேன். பத்திரிகைக்கு விளம்பரம் சேகரித்தேன். அதன்பின் நடிகரானேன்.
கொரோனாவால், ஒன்பது மாதம் வீட்டில் இருந்து துணிகளை துவைத்தேன். துணி துவைப்பதால் நல்ல உடற்பயிற்சி. ஆனால், இப்போது, 'வாஷிங் மெஷின்' கொடுப்பதாக கூறுபவர்களிடம் அதற்கான மின் கட்டண செலவு தொகையை கேளுங்கள்' என்றார். உடன் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர், 'எங்களை பணி நிரந்தரம் செய்ய உறுதி கொடுங்க. இதுவரை ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருந்தீங்க. அப்ப ஏன் வாய் திறக்கல?' என்றார்.
சரத்குமார் அவரை சமாளிக்கும் வகையில், 'கேள்வி கேட்டுட்டு நகராதீங்க. பதில் சொல்றேன் கேளுங்க' என்றவர், 'எங்களுக்கு இப்ப வாய்ப்பு தாருங்கள் கோரிக்கை நிறைவேற்றுவோம்' எனக்கூறி பிரசார வேனில் பறந்து சென்றார். அட, நாட்டாமையையே ஓட்டம் எடுக்க வச்சுட்டாரே கில்லாடி பெண் என, கூட்டத்தில் சிலர் கலாய்த்தனர்.
வாசகர் கருத்து