'அமைச்சருக்கு நான் பணம் தருகிறேன்:' பா.ம.க., வேட்பாளர் ஆவேசம்
திண்டுக்கல் லோக்சபா தொகுதியில் பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர் திலகபாமா போட்டியிடுகிறார். தினசரி பிரசாரத்தில் வடை சுடுவது, குதிரை வண்டி ஓட்டுவது, வெங்காய பேட்டையில் தரம் பிரிப்பது, விவசாய நிலத்தில் களை எடுப்பது, மருந்து அடிப்பது என, புதிய உத்திகளை செய்து வருகிறார்.
நேற்று திண்டுக்கல் கோவிந்தாபுரத்தில், தி.மு.க., அமைச்சர் பெரியசாமியின் வீடு உள்ள தெருவில் ஓட்டு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது தப்பாட்டம், பறை அடித்து ஆடியபடி ஓட்டு சேகரித்தார்.
அங்கு பேசுகையில், ''2021 சட்டசபை தேர்தலின் போது ஆத்துார் தொகுதியில் பா.ம.க., சார்பில் போட்டியிட்டேன். எனக்கு ஓட்டு போட்டால் எதுவும் செய்ய மாட்டேன்.
''ஏனென்றால், நான் இந்த ஊரை சேர்ந்தவரே இல்லை என அமைச்சர் ஐ.பெரியசாமி கூறினார். அதோடு அவரிடம் நான் பணம் வாங்கியதாகவும் பொய்யான பிரசாரத்தில் ஈடுபட்டனர். பெரியசாமிக்கு வேண்டுமானால் நான் பணம் தருகிறேன்,'' என்றார்.
அருகில் இருந்த பா.ம.க.,வினரோ, 'நம்ம வேட்பாளர் பலநாள் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்' என தங்களுக்குள் மார்தட்டிக் கொண்டனர்.
வாசகர் கருத்து