'செருப்பு சின்னமாவது கொடுங்க' : சீமான் கதறல்

“கரும்பு விவசாயி சின்னத்தை பெற, உச்ச நீதி மன்றம் செல்வேன். அந்த சின்னம் கிடைக்காவிட் டால், எந்த சின்னம் தந்தா லும், அதை வைத்து தேர்தலில் போட்டியிடுவேன்," என, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.

அவர் நேற்று, கரும்பு விவசாயி சின்னம் பெறுவதற்காக, தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து பேசினார்.

பின், அவர் அளித்த பேட்டி:

எங்கள் கட்சியின் கரும்பு விவசாயி சின்னத்தை, பாரதிய பிரஜா ஐக்கியதா என்ற கட்சிக்கு, தேர்தல் கமிஷன் வழங்கி உள்ளது. அக்கட்சி பதிவு பெற்ற கட்சி. இரண்டு தொகுதிகளில் போட்டி யிட்டு, 71 ஒட்டுகள் பெற்று உள்ளது. அக்கட்சியின் நிறுவனர், கர்நாடகாவுக்கு காஸ் சிலிண் டர், ஆந்திராவுக்கு ஸ்டவ் சின்னம் பெற்றுள்ளார். இது தவிர, 11 மாநிலங்களுக்கு சின்னம் பெற்றுள்ளார். தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில், அக் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது. நான் ஆறு தேர்தலில் போட்டியிட்டுள்ளேன்; 7 சதவீத.ஓட்டுகளை பெற்றுள்ளேன். தி.மு.க., அ.தி. மு.க.,வுக்கு அடுத்தபடியாக, நான் தான் உள்ளேன். இதை பரிசீலிக்காமல், முதலில் மனு கொடுத்ததாகக் கூறுகின்றனர்; அதை ஏற்கிறேன். அவர்கள் கொடுத்த கால அளவிற்குள் நாங்களும் மனு அளித்தோம். நான் கொடுக்கும் போது சின்னம் வெளிவந்து விட்டது. அதையும் கமலுக்கு, 'டார்ச் லைட்' சின்னம் கிடைத்ததாக அறிவித்த போது அறிந்து கொண்டேன். நான் ஏற்கனவே பயன்படுத்தி இருப்பதால், எனக்கு ஒதுக்கி இருக்க வேண்டும். அக்கட்சி சார்பில், டிச., 17ல் கொடுத்துள்ளனர்; அன்றே சின்னம் கொடுத்து விட்டனர். எனவே, திட்டமிட்டு வழங்கப்பட்டதாக கருது கிறேன். கரும்பு விவசாயி சின்னத்தை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், எனக்கு ஒதுக்கும்படி கேட்டேன். தலைமை தேர்தல் அதிகாரி பரிந்துரைக்கிறேன் என்று கூறினார்.

சின்னம் பெற உச்சநீதிமன் றம் வரை செல்வேன். எனக்கு அநீதி இழைக்கப்பட்டது, அனைவருக்கும் தெரிய வேண்டும். முதலில், 'புலி' கேட்டேன்; தேசிய விலங்கு என்றனர். 'மயில்' கேட்டேன்; தேசியப் பறவை என்றனர். தேசிய மலர் தாமரையை, ஏன் பா.ஜ.,வுக்கு கொடுத்தீர் என கேட்டேன்.கை சின்னத்திற்கு ஒட்ட ளித்து விட்டு, கையை காட்டி செல்கின்றனர். உதயசூரியன் சின்னத்தை எப்படி மறைப்பீர்கள்? குண்டூசி எல்லாம் சின்னம் என்றால் எப்படி ? ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு சின்னம் கொடுங்கள் அல்லது எண் கொடுங்கள்.

ஒரு கட்சிக்கு, 75 ஆண்டுகளாக ஒரே சின் னம் என்றால் எப்படி? புதிதாக கட்சி ஆரம்பித்தால், 8 சதவீதம் ஒட்டுகளை தொட வேண்டும் என்கின்றனர்.

அதை தொடுவதற்குள் குரல்வளையை நெரித்து விடுகின்றனர். கடைசியில் எந்த சின்னம் வருகிறதோ, களைக்கொட்டியோ, மண் வெட்டியோ எடுத்துக் கொண்டு சண்டைக்கு போக வேண்டியது தான்.துடைப்பம் எடுத்துக் கொண்டு, கெஜ் ரிவால் செல்லவில்லையா; செருப்பு கொடுத்தாலும் போட்டியிடுவேன்.

இவ்வாறு சீமான் கூறினார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்