'லீவு கொடுங்க' குவியும் மனுக்கள்
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர் - தனி, மதுராந்தகம் மற்றும் உத்திரமேரூர் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது காஞ்சிபுரம் லோக்சபா தனித்தொகுதி.
இதில், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளிலும் சேர்த்து, 6,800 அரசு ஊழியர்கள், இந்த தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.
ஏற்கனவே, மண்டல அலுவலர்கள், பறக்கும் படை என பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தல் நாளன்று ஓட்டுச்சாவடி பணிகளிலும், பெரும்பாலான அரசு ஊழியர்கள் ஈடுபடஉள்ளனர்.
இந்நிலையில், 'தேர்தல் பணியில் விலக்கு அளிக்க வேண்டும்' என, பல்வேறு அரசு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுக்கின்றனர். உடல்நிலை சரியில்லை எனக்கூறி தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்து வருகின்றனர்.
உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, நாள்பட்ட நோய்கள் காரணமாக மருத்துவ சான்றுடன் அவர்கள் மனு அளிப்பதால், அதைத் தவிர்க்க முடியாமல் வாங்கிக் கொள்ளும் தேர்தல் அலுவலர்கள், மனுவை பரிசீலிப்பதாகக் கூறி அனுப்புகின்றனர்.
வாசகர் கருத்து