நீலகிரி தொகுதியில் இ.பி.எஸ்., போட்டியா?
நீலகிரி லோக்சபா தொகுதி தனி தொகுதியாக இருந்தும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மூன்று லோக்சபா தேர்தல்களில், தி.மு.க., - எம்.பி., - ஆ.ராஜா இரண்டு முறை வெற்றி பெற்றார். ஒரு முறை அ.தி.மு.க.,வில் கோபாலகிருஷ்ணன் வெற்றி பெற்றார். வரும் தேர்தலில், இந்த தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட, அன்னுார் எம்.எல்.ஏ., தனபாலின் மகன் லோகேஷ், குன்னுார் கவுன்சிலர் குருமூர்த்தி உட்பட 16 பேர், 15,000 ரூபாய் செலுத்தி தங்களது பெயரில் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
இந்நிலையில், 'கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி போட்டியிட வேண்டும்' என, வலியுறுத்தி, அவர் பெயரில் விருப்ப மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அருவங்காடு ஜெகதளா பேரூராட்சி கவுன்சிலர் சஜீவன் கொடுத்துள்ளார். நீலகிரி தனி தொகுதி என்பது, இந்த கவுன்சிலருக்கு தெரியுமா; தெரியாதா? என்பது தான் கட்சியினரின் பேச்சாக உள்ளது. சஜீவன் கூறுகையில், ''மூன்று தேர்தல்களில், தனி தொகுதியான நீலகிரி தொகுதி, பொது தொகுதியாக மாறும் என நினைத்து, முன்னாள் முதல்வருக்கு விருப்ப மனு அளித்தேன்,'' என்றார்.
வாசகர் கருத்து