நான் சினிமா டைரக்டர் அல்ல! கதறும் நீலகிரி வேட்பாளர்
''எனது பெயருடன், சினிமா டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெயரை இணைத்து மக்கள் குழம்பி வருகின்றனர்,'' என, அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச் செல்வன் கவலை தெரிவித்தார்.
நீலகிரி தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். இவர் முன்னாள் சபாநாயகரும், அவிநாசி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான தனபாலின் மகன்.
இவரது பெயர் லோகேஷ் என இருப்பதால், தவறுதலாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பெயரை பலரும் உச்சரித்து வருகின்றனர். தமிழ்ச்செல்வன் என்பதற்கு பதிலாக கனகராஜ் என, கட்சியினரே கூறும் நிலை உள்ளது.
நேற்று நீலகிரி மாவட்டம், கூடலுார் அருகே தொரப்பள்ளியில், தேர்தல் பிரசாரத்தை துவக்கிய லோகேஷ் தனது பெயர் குறித்த குழப்பத்தை வாக்காளர்களுக்கு சுட்டிக்காட்டி, பிரசாரம் செய்தார்.
அவர் பேசுகையில், ''எனது பெயருடன், சினிமா டைரக்டர் லோகேஷ் கனகராஜ் பெயரை இணைத்து மக்கள் குழம்பி வருகின்றனர். அதில், எந்த குழப்பமும் வேண்டாம். எனது பெயர் லோகேஷ் தமிழ்ச்செல்வன். இரட்டை இலைக்கு ஓட்டு போடுங்கள்,'' என்றார்.
வாசகர் கருத்து