அயோத்தி ராமர் கோயில் இருக்கும் பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி
அயோத்தி: உ.பி.,யில் ராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் பா.ஜ.,வுக்கு பலமான ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் சமாஜ்வாதி வெற்றி பெற உள்ளது.
உத்தர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் நீண்ட போராட்டத்திற்கு பிறகு ராமர் கோயில் கட்டப்பட்டது. இதன் பிரான பிரதிஷ்டை விழா கடந்த ஜனவரியில் நடைபெற்றது. மக்களின் பல ஆண்டு கோரிக்கையான ராமர் கோயில் கனவு நிறைவேறியதால் பா.ஜ.,விற்கு ஆதரவு பெருகியது. இது இந்த லோக்சபா தேர்தலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்று வெளியான தேர்தல் முடிவில், உ.பி.,யில் பாதிக்கும் மேலான தொகுதியில் பா.ஜ., தோல்வியடைந்தது.
குறிப்பாக, அயோத்தியின் ராமர் கோயில் அடங்கிய பைசாபாத் தொகுதியில் பா.ஜ., வெற்றிப்பெறும் என கணித்த நிலையில், அங்கு சமாஜ்வாதி கட்சி வெற்றி அடைய உள்ளது. பா.ஜ., வேட்பாளர் லாலு சிங்கை விட சுமார் 47 ஆயிரம் ஓட்டுகள் முன்னிலையுடன் சமாஜ்வாதியின் அவதேஷ் பிரசாத் வெற்றியை நெருங்கியுள்ளார்.
வாசகர் கருத்து