இ.பி.எஸ்.,சை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள்
சேலம்: சேலம், சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டில் நேற்று, அ.தி.மு.க. பொதுச் செயலர் இ.பி.எஸ்., இருந்தார். இவரை, முன்னாள் எம்.பி., தம்பிதுரை, முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, தங்கமணி, ஆனந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர். இவர்கள் லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை குறித்தும், கட்சி நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தனர். 30 நிமிடங்களுக்கு மேல் நடந்த சந்திப்பை முடித்து கொண்டு, முன்னாள் அமைச்சர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
ராஜஸ்தானில் இருந்து 2,688 டன் வெள்ளை சிமென்ட் வருகை
சேலம்: ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இருந்து சேலம், கோவைக்கு சரக்கு ரயில் மூலம், 2,688 டன் வெள்ளை சிமென்ட் வந்தடைந்தது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து, 2,688 டன் வெள்ளை சிமென்ட் சரக்கு ரயில் மூலம், நேற்று சேலம் செவ்வாய்ப்பேட்டை கூட்ெஷட்டை வந்தடைந்தது. இங்கிருந்து கன்டெய்னர் லாரிகள் மூலம் சேலம், திருப்பூர், கோவை, ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் உள்ள குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்று, 3,000 டன் உரங்கள், தானியங்கள் வடமாநிலங்களில் இருந்து, சேலம் வர உள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைக் சறுக்கி விழுந்தவர் லாரி சக்கரத்தில் சிக்கி பலி
பனமரத்துப்பட்டி: வாழப்பாடி அருகே முத்தம்பட்டியை சேர்ந்த பெயின்டர் சக்திவேல், 27. நேற்று, நாழிக்கல்பட்டியை சேர்ந்த அவரது நண்பர் சஞ்சய், 30, ஓட்டிய பல்சர் பைக்கில் அமர்ந்து சென்றார். நாமக்கல்-சேலம் நெடுஞ்சாலை, தாசநாயக்கன்பட்டியில் மதியம், 2:15 மணிக்கு மண் சாலையிலிருந்து தார்சாலையில் பைக்கை ஏற்ற முயன்றனர்.
அப்போது பைக் டயர் சறுக்கியதால், நிலைதடுமாறிய சக்திவேல் தார்ச்சாலையில் விழுந்தார். பின்னால் வந்த லாரி, சக்திவேல் மீது ஏறியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மண் சாலையில் விழுந்த சஞ்சய், லேசான காயத்துடன் உயிர் தப்பினார். விபத்து குறித்து, மல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து