'அங்க போய் பேசுங்க' கமலுக்கு தி.மு.க., அறிவுரை
தி.மு.க., கூட்டணியில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு, தலா இரு தொகுதிகள் வழங்கப்பட்டு உள்ளன. எந்த தொகுதிகள் என்பது முடிவு செய்யப்படவில்லை. தற்போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வசம் இருக்கும் கோவை அல்லது மதுரை தொகுதியை கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கேட்டுள்ளது.
கோவை தொகுதியில் குழு அமைத்து, ஆறு மாதம் முன்பே பணிகளை துவக்கி விட்டதாக, கமல் தரப்பில் தி.மு.க.,விடம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், கமல் கட்சி நிர்வாகிகளும், மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் பேசி, இப்பிரச்னைக்கு தீர்வு காணுமாறு, தி.மு.க., தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
வாசகர் கருத்து