ஆ.ராசா தனி தொகுதியில் நிற்கலாமா?

தி.மு.க.,வின் முன்னணி தலைவர்களில் ஒருவர் ஆ.ராசா. இரண்டு முறை தனி தொகுதியில் போட்டியிட்டவர். மத்திய அமைச்சரவையிலும் இடம் பிடித்தவர்.

தனி தொகுதி என்பது பட்டியல் இனத்தவருக்கு அரசியல் அமைப்பு சட்டம் தரும் ஓர் அசாதாரணமான உரிமை. இது உண்மையானவர்களுக்கு போய் சேர வேண்டும் என்பதை நிலைநாட்டுவது அரசின் கடமை.

பட்டியல் இனத்தவர் ஹிந்துவாக இருக்கும் வரை மட்டும் தான் அதற்கான உரிமையை பெற முடியும். வேறு மதங்களுக்கு மாறினால் அவர்களுக்கு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கான உரிமை மட்டுமே கிடைக்கும். அதாவது ஒருவர் பட்டியல் இனத்தவராக பிறந்திருந்தாலும், அதனால் வரக்கூடிய சலுகைகளை பெற வேண்டுமானால், அவர் ஹிந்துவாக இருக்க வேண்டும்.

இந்த தருணத்தில் தான் ஆ.ராசா ஒரு ஹிந்துவா? அவர் தனி தொகுதியில் போட்டியிடலாமா? என்பது பற்றி சந்தேகம் எழுகிறது.

அளவுகோல் எது?



ஒருவர் கிறிஸ்துவர் என்பதற்கான அடையாளம் என்ன? அவர் ஒரு சர்ச்சில் ஞானஸ்தானம் எனப்படும் 'பாப்டிஸம்' பெற்றிருக்க வேண்டும். அதற்கான சான்றிதழும் தரப்படும். 'பாப்டிஸம்' பெறாமல் ஒருவர் தினமும் 'சர்ச்' சென்றாலும், இயேசுவை வழிபட்டாலும், சட்டப்படி அவர் கிறிஸ்துவர் அல்ல.

அதே போல, ஒருவர் இஸ்லாம் மதத்தைத் தழுவ விரும்பினால் 'ஷஹாதா' என்னும் வாக்கியத்தை இரண்டு சாட்சிகளின் முன்பாக கூற வேண்டும். 'ஷஹாதா' என்பது “அல்லாவை தவிர வேறு இறைவன் இல்லை, முகமது நபியை தவிர வேறு இறை துாதர் இல்லை” என்ற வாக்கியம் தான். இப்படியாக ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நுழைவுச் சடங்கு உள்ளது.

ஹிந்துவிற்கென என்ன இருக்கிறது? தனியாக எதுவுமில்லை. அப்படியானால் ஒருவர் ஹிந்து என்பதற்கு என்ன அடையாளம்? அவரது நடத்தை தான் அடையாளம்.

முதலாவதாக அவருக்கு ஹிந்து மதத்தின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும். ஹிந்து கடவுள்களை நம்ப வேண்டும். குறைந்தபட்சம், ஹிந்து மதத்தையும், அதன் நம்பிக்கைகளையும், கடவுளர்களையும் கேவலப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த மூன்றில் ஒன்றைக்கூட கடைப்பிடிக்காத ஒருவர் தன்னை ஹிந்து என்று கூறிக்கொள்வது நகைப்புக்கு உரியது.

கடந்த 2022 செப்டம்பர் மாதம் நாமக்கல்லில் நடந்த திராவிடர் கழக கூட்டத்தில் பேசிய ஆ.ராசா, “நீ ஹிந்துவாக இருக்கும்வரை சூத்திரன். சூத்திரனாக இருக்கும் வரை நீ ஒரு வேசி மகன். நீ ஹிந்துவாக இருக்கும் வரை பஞ்சமன். பஞ்சமனாக இருக்கும் வரை நீ ஒரு வேசி மகன். ஹிந்துவாக இருக்கும் வரை நீ ஒரு தலித், தீண்டத்தகாதவன். உங்களில் எத்தனை பேர் வேசி மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? நீங்கள் ஹிந்து மதத்தில் இருந்து வெளியேறினால் மட்டுமே இந்த அவமானம் துடைத்தெறியப்படும்,” என்று பேசினார்.

ஆ.ராசா ஹிந்துவா?



இதிலிருந்து இரண்டு செய்திகள் தெளிவாகின்றன. ஒன்று, அவர் ஹிந்து மதத்தை படு கேவலமாக அவமரியாதை செய்துள்ளார். இரண்டாவதாக, 'நான் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டேன், நீங்களும் வெளியேறுங்கள்' என்று, மற்றவர்களையும் அழைக்கிறார்.

தான் ஹிந்து இல்லை என்பதற்கு ஆ.ராசா தெள்ளத்தெளிவாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துவிட்டார்.

மேலும் ஹிந்து கடவுள்களை 'த்துா' என்று உமிழ்ந்து பேசியதும், அவர் ஹிந்து அல்ல என்பதை அவரே ஒப்புக்கொண்டதாகவே, கேட்கும் யாரானாலும் நினைப்பர்.

எனவே, ஆ.ராசா பிறப்பால் பட்டியல் இனத்தவராக இருந்தாலும், தான் ஹிந்து மதத்திலிருந்து வெளியேறிவிட்டதாக கூறுவதால், பட்டியல் இன ஹிந்துக்களுக்கான சலுகைகளை அவர் இழக்கிறார். எனவே, உண்மையான பட்டியல் இனத்தவருக்காக ஒதுக்கப்பட்டுள்ள தனி தொகுதியில் அவர் போட்டியிடுவது சட்டப்படியும், நியாயப்படியும் தவறு.

-பா.பிரபாகரன், எழுத்தாளர்


Barakat Ali - Medan, இந்தோனேசியா
05-ஏப்-2024 14:35 Report Abuse
Barakat Ali சாதிமத வேறுபாடற்ற சமூகம் என்று இந்திய அரசியல் சட்டம் சொன்னாலும் உண்மை நிலை அப்படியில்லை ..... காமெடியான இந்திய ஜனநாயகம் ....
A P - chennai, இந்தியா
04-ஏப்-2024 21:27 Report Abuse
A P தைரியமில்லாத தூங்குமூஞ்சி தேர்தல் ஆணையம் போல இருக்கிறது. சாதாரண கிராமத்தான் கூட ராசா இந்து இல்லை என்பதற்கு இந்த செய்தியில் வந்த உண்மைகளை வைத்தே சொல்லி விடுவான். இவரது வேட்பு மனுவை ஆணையம் எப்படி ஏற்றது என்று தெரியவில்லை. அங்கு தேர்தலில் நிற்கின்ற ஏதாவது ஒரு நல்ல கட்சி வேட்பாளர் இதனை கோர்ட்ல challenge செய்யலாமே. ஒழுக்கமான கட்சித் தலைமையாக இருந்தால், இப்போதைய சென்னை மேயர் தனது மதம் படி எப்படி மேயராக இருக்க முடியும் என்பதற்கும்., ராசா எப்படி தனித்த தொகுதி விண்ணப்பிக்கலாம் என்பதற்கும் சட்டப்படி தகுந்த விளக்கம் தர வேண்டாமா.
katharika viyabari - coimbatore, இந்தியா
04-ஏப்-2024 21:22 Report Abuse
katharika viyabari இவரெல்லாம் ஒரு மனுஷன்னு நீலகிரி மக்கள் முன்பு தேர்ந்து எடுத்துக்காக இன்னமும் வருந்தி கொண்டிருக்கிறார்கள். இந்த தடவை சரியா சிக்கிட்டார். வச்சு செய்ய போறாங்க நீலகிரி மக்கள்.
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore,, இந்தியா
04-ஏப்-2024 20:35 Report Abuse
NicoleThomson ஆனாலும் ராசா ஊரிலுள்ளோரையெல்லாம் தந்தையே என்று அழைக்கும் வகையில் பிறந்தவர் என்பதால் அவருக்கு உரிய மரியாதை கொடுங்க
Sami Sam - chidambaram, இந்தியா
04-ஏப்-2024 20:04 Report Abuse
Sami Sam இப்படி கருத்து செய்தி வெளியிட்டால் மட்டும் போதுமா தேர்தல் அதிகாரிகளிடம் புகாராக கொடுங்கள் அல்லது கோர்ட்க்கு செல்லுங்கள்
Nagarajan D - Coimbatore, இந்தியா
04-ஏப்-2024 18:33 Report Abuse
Nagarajan D இந்த வழக்கு கோர்ட்டுக்கு போனால் 25 வருடம் விசாரணை என்று இழுத்து பிறகு ஒரு உயர்மட்ட பெஞ்சுக்கு அனுப்பி அங்கே மீண்டும் ஆரம்பத்திலிருந்து கேசு நடக்கும்... ஒழுங்காக தீர்ப்பே வராது... நமது நீதி மன்றங்கள் காலதாமதம் மட்டுமே செய்கிறது...
Kasimani Baskaran - Singapore, சிங்கப்பூர்
04-ஏப்-2024 17:07 Report Abuse
Kasimani Baskaran பட்டியலினத்தவர் மதம் மாறினால் பிற்படுத்தப்பட்டவராகிவிடுவார். ஆகவே இவர் தனித்தொகுதியில் நிற்பது சட்டத்துக்கு புறம்பானது.
Hari Bojan - Ootacamund (Ooty), இந்தியா
04-ஏப்-2024 16:21 Report Abuse
Hari Bojan மிகவும் ஆணித்தரமான ஒன்று பெரிய கேள்விக்குறியாக உள்ளது
Narayanan - chennai, இந்தியா
04-ஏப்-2024 15:17 Report Abuse
Narayanan தேர்தல் ஆணையம் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் . அவர் போட்டியில் இருந்து விலக சொல்லுங்கள் . தனித்தொகுதியில் நிற்க தகுதியில்லை
Dharmavaan - Chennai, இந்தியா
04-ஏப்-2024 14:29 Report Abuse
Dharmavaan இதை பல முறை சொல்லியாயிற்று ஆனால் எந்த எதிர் கட்சியும் சட்டம் /கோர்ட் நடவடிக்கையம் எடுக்கவில்லை
மேலும் 1 கருத்துக்கள்...
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்