அதிமுக செய்யும் புதுமை: கான்ட்ராக்டர்களே வேட்பாளர்கள்
லோக்சபா தேர்தலில் பல தொகுதிகளில், கான்ட்ராக்டர்களை களம் இறக்க திட்டமிட்டுள்ளதால், முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும்எம்.பி.,க்களை விருப்ப மனு தாக்கல் செய்ய வேண்டாம் என அ.தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.அ.தி.மு.க.,வில் பொதுச்செயலராக பழனிசாமி பதவியேற்ற பின், அவர் சந்திக்க உள்ள முதல் லோக்சபா தேர்தல் இது. அதனால் கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார். தேர்தலுக்அந்த வகையில், கடந்த முறை கூட்டணியில் இருந்த, தே.மு.தி.க., மற்றும் பா.ம.க.,வை இழுக்கும் பொறுப்பை, நம்பிக்கைக்குரிய முன்னாள் அமைச்சர்களிடம் ஒப்படைத்துள்ளார்.
தடபுடலாக
அதேநேரம், இந்தமுறை பல தொகுதிகளில், செலவுக்கு செல்வாக்குள்ள நபர்கள் தேவைப்படுவதால், பழனிசாமி புதுமையான முறையைக் கையாளத் திட்டமிட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள்கூறுகின்றன. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தையும் கட்சியினர் கூறுகின்றனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் சட்டசபை தொகுதி திண்டமங்கலத்தில், கடந்த ஜனவரி மாதம், பழனிசாமி மாட்டு வண்டியில் வலம் வந்து, பொங்கல் விழா கொண்டாடினார்.கான பல்வேறு வியூகங்களை வகுப்பதிலும் தீவிரமாக உள்ளார்.அந்த விழாவுக்கு, அங்குள்ள பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை கான்ட்ராக்டர் பரமசிவம் 20 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து தடபுடலாக நடத்திக் காட்டினார்.அதனால் பெரும் திருப்தி அடைந்த பழனிசாமி கான்ட்ராக்டர் பரமசிவம் அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு சேலம் தொகுதியில் கட்சி சார்பில் 'சீட்' வழங்க முடிவு செய்துள்ளதாக கட்சியினர் கூறுகின்றனர்.அதை உறுதி செய்யும் வகையில் சமீபத்தில், கான்ட்ராக்டர் பரமசிவத்துக்கு மாநில அம்மா பேரவை துணை செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது.ஓமலுார் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ.,வான மணியின் நெருங்கிய உறவினர் தான் இந்த கான்ட்ராக்டர் பரமசிவம்.மேலும், சேலத்தின் முக்கிய ஓட்டு வங்கியாக உள்ள வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதாலும், தேர்தலில் பணத்தை தண்ணியாக செலவழிக்கத் தயங்காதவர் என்பதாலும், இந்த முறை அவருக்குத்தான் சீட் என்கின்றனர்.கான்ட்ராக்டர் பரமசிவத்தைப் போல, தமிழகத்தின் முக்கிய தொகுதிகளில் செலவுக்கு தயங்காத கான்ட்ராக்டர்களின் பட்டியலும் ஏற்கனவே பழனிசாமி வசம் இருப்பதாகக் கூறப்படுகிறது.அதன் அடிப்படையில், அ.தி.மு.க., ஆட்சியின்போது நெடுஞ்சாலைத் துறை, உள்ளாட்சித் துறையில் விசுவாசமிக்க கான்ட்ராக்டர்களாக வேலை செய்த நபர்களை கட்சித் தலைமை தேர்வு செய்து உள்ளது.முக்கிய தொகுதிகளில், குறிப்பாக, சேலம், திருப்பூர், கோவை, கரூர் உள்ளிட்ட 13 லோக்சபா தொகுதிகளில் கான்ட்ராக்டர்களே வேட்பாளர்களாக களம் இறக்கப்பட உள்ளதாகவும் சொல்கின்றனர்.மேலும், சீட் தொடர்பான டீலிங்கும் முடிந்து விட்டதாக கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
ஒதுங்குவது நல்லது
கான்ட்ராக்டர்கள் உடனான ஒப்பந்தம் முடிந்து விட்டதால், முன்னாள்எம்.எல்.ஏ.,க்கள் மற்றும்எம்.பி.,க்கள் விருப்ப மனு வழங்க வேண்டாம் எனவும் கட்சித் தலைமை வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது.ஆனால் அதையும் மீறி, இதுவரை, 1,500க்கும் மேற்பட்டோர் விருப்ப மனு வழங்கியுள்ளனர். ஆனால், இவர்களில் முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள் பலரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.அ.தி.மு.க., எதிர்க்கட்சியாக உள்ள நிலையில், பழனிசாமி எதிர்பார்த்த, 'மெகா கூட்டணி'யும் அமைந்தபாடில்லை.தவிர இத்தேர்தலில், தமிழகத்தில், 4 முனை போட்டிக்கு வாய்ப்புள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க., 'பா.ஜ., ஆட்சியை அகற்ற வேண்டும்' என்பதை பிரதான கோஷமாக வைத்து, நிறைய பொருட் செலவில் தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது.அதனால் தி.மு.க.,வுக்கு ஈடு கொடுக்கும் வகையில் தேர்தலில் செலவு செய்வதை விட ஒதுங்கி இருப்பதே நல்லது என்ற மனநிலைக்கு அ.தி.மு.க., 'முன்னாள்' வந்து விட்டனர்.இந்த நிலையில்தான் பழனிசாமியின் புதிய வியூகம் பற்றி செய்திகள் வெளியாகி, முன்னாள்களை சந்தோஷப்படுத்தி இருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
வாசகர் கருத்து