தி.மு.க., அதிருப்தி ஓட்டுகளை அறுவடை செய்யும் பன்னீர்
ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் சுயேச்சையாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வேட்பாளரான சிட்டிங் எம்.பி., கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி பக்கம் வரவில்லை என்ற புகார் பரவலாக உள்ளது.
ரோடு, குடிநீர் வசதியின்றி மக்கள் சிரமப்படுகின்றனர். இவற்றை பன்னீர்செல்வம் தனக்கு சாதகமாக்கியுள்ளார்.
பிரசாரத்திற்கு செல்லும்போது கிராம மக்கள் முன்னாள் முதல்வர் என்ற முறையில் பன்னீர்செல்வத்திடம் தங்கள் பகுதி குறைகளைக் கூறுகின்றனர்.
அவற்றை பொறுமையாக கேட்கும் பன்னீர், 'நிச்சயம் செய்து தருவேன். மாநில அரசு செய்யவில்லை என்றால் நானே உங்களுக்காக போராடுவேன்' என்ற வாக்குறுதியை தருகிறார்.
இவ்வாறு தி.மு.க.,வினர், சிட்டிங் எம்.பி., மீதான அதிருப்தி ஓட்டுகளை பன்னீர்செல்வம் அறுவடை செய்கிறார்.
வாசகர் கருத்து