4 பெண் வேட்பாளர்கள் காங்.,க்கு ஏற்பட்ட நெருக்கடி
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டசபை தொகுதியில் எம்.எல்.ஏ.,வாக இருந்த விஜயதரணி, காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்து பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் இங்கு இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்., கம்யூ., தி.மு.க., மற்றும் பா.ஜ., ஆகிய கட்சிகளுக்கு அங்கு கணிசமான அளவு வாக்கு வங்கி உள்ளது. இருந்த போதும் அ.தி.மு.க., முதலில் ராணி என்பவரை வேட்பாளராக அறிவித்தது. அதைத் தொடர்ந்து பா.ஜ., வி.எஸ். நந்தினி என்பவர் அறிவிக்கப்பட்டார்.
'நாம் தமிழர்' கட்சி சார்பில் இரா.ஜெமினி என்பவர் வேட்பாளர் ஆனார்.
மற்ற கட்சிகளில் பெண்களே வேட்பாளராக நிறுத்தப்பட்டதால், காங்., தரப்பில் 'சீட்' கேட்டு நெருக்கடி கொடுத்த ஆண் நிர்வாகிகளுக்கு சிக்கல் ஏற்பட்டது. ஆண்களுக்கு சீட் கொடுத்தால், காங்.,கில் பெண்களுக்கு மரியாதை இல்லை என்ற விஜயதரணியின் குற்றச்சாட்டு உண்மையாகி விடும்.
அதனால், மாநில தலைமை சாதுாரியமாக காய் நகர்த்தி தாரகை கல்பர்ட்டை வேட்பாளராக அறிவித்தது. ஆக, விஜயதரணி விட்டுச் சென்ற இடத்தைப் பிடிக்க நான்கு பெண்கள் போட்டியிடுகின்றனர்.
வாசகர் கருத்து