அனைத்து ஜாதியினரும் உள்ள கரூரில் ஒரே ஜாதி வேட்பாளர்கள் போட்டி
கரூர் லோக்சபா தொகுதியில், திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து வேடசந்துார், திருச்சி மாவட்டத்திலிருந்து மணப்பாறை, புதுக்கோட்டை விராலிமலை, கரூர் மாவட்டத்தில் இருந்து, கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம் என, 6 தொகுதிகள் அடங்கிஉள்ளன.
இந்த, 6 தொகுதி களும், கொங்கு வெள்ளாள கவுண்டர், வேட்டுவ கவுண்டர், ஊராளி கவுண்டர், நாயக்கர், வெள்ளாளர், முக்குலத்தோர், முத்தரையர், ஒக்கிலிக கவுடர், பட்டியல் பிரிவுகள், சிறுபான்மையினர் என அனைத்து ஜாதியினரும் நிறைந்த தொகுதி.
கடந்த, 2014, 2019 தேர்தல்களில், அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., ஆகிய கட்சிகள் கொங்கு வெள்ளாள கவுண்டர்களையே வேட்பாளராக நிறுத்தின. இந்த லோக்சபா தேர்தலில் போட்டி யிடும், பா.ஜ., - செந்தில்நாதன், காங்., - ஜோதிமணி, அ.தி.மு.க., - தங்கவேல், நாம் தமிழர் கட்சியில் கருப்பையா ஆகிய நான்கு பேரும் கொங்கு வெள்ளாள கவுண்டர்களே.
தேர்தலில், சமுதாய பலம் மட்டுமல்லாது பொருளாதார பலம் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.
தமிழகத்தில் பணம் பட்டுவாடா அதிகம் நடக்கும் தொகுதியாக கரூர் மாறி விட்டது. இதனால், மற்ற சமுதாயத்தினரோ மற்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களோ கரூர் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டுவதில்லை.
தொடர்ந்து கரூர் லோக்சபா தொகுதியில், குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவர்கள் போட்டியிட்டு வருகின்றனர்.
வாசகர் கருத்து