தேர்தல் விளம்பரங்கள் தி.மு.க., முதலிடம்
தேர்தல் விளம்பரத்திற்கு அனுமதி பெற்றதில், தி.மு.க., முதலிடத்தில் உள்ளது.
தேர்தல் தொடர்பாக, எந்த வடிவில் விளம்பரம் வெளியிடுவதாக இருந்தாலும், அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட, விளம்பர கமிட்டியிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
அவர்கள் அனுமதி மறுத்தால், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையிலான கமிட்டியிடம் மேல் முறையீடு செய்யலாம். அந்த வகையில், அதிகபட்சமாக தி.மு.க., சார்பில், 60 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன.
அதில், 640 விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில், 51க்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், 123 விளம்பரங்களின் கருத்துக்களுக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது; ஒன்பது நிராகரிக்கப்பட்டது. மொத்தம், 51 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
தி.மு.க.,வுக்கு அடுத்த இடத்தில், அ.தி.மு.க., உள்ளது. அக்கட்சி சார்பில், 50 விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டன. அதில், 187 விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. அவற்றில், 112க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 75க்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது; ஒன்பது நிராகரிக்கப்பட்டது. மொத்தம், 41 சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
அதற்கு அடுத்த இடங்களில், பா.ஜ.,- நாம் தமிழர் கட்சி, காங்கிரஸ், பா.ம.க., அ.ம.மு.க., போன்றவை இடம் பெற்றுள்ளன.
மொத்தம் 160 விண்ணப்பங்களில், 1,280 விளம்பரங்கள் இடம் பெற்றிருந்தன. இவற்றில், 980க்கு அனுமதி அளிக்கப்பட்டது. 250க்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும், 27 நிராகரிக்கப்பட்டன. மொத்தம், 135 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து