திருமாவளவனுக்கு எதிராக சிதம்பரத்தில் வீடுதோறும் பிரசாரம்

சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் திருமாவளவனுக்கு எதிராக பா.ஜ., ஆதரவாளர்கள் வீடு, வீடாகப் பிரசாரம் செய்து வருகின்றனர்.

தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம் தொகுதியில் வி.சி.க., தலைவர் திருமாவளவனும் பா.ஜ., சார்பில் கார்த்தியாயினியும் போட்டியிடுகின்றனர்.

கடந்த 2019ல் தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள் நான்கு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற போதிலும் சிதம்பரத்தில் திருமாவளவன், 3,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வென்றார்.

இதனால் இந்தத் தேர்தலில் ஓய்வின்றி, கிராமம் கிராமமாக பிரசாரம் செய்து வருகிறார்.

பா.ஜ., கூட்டணியில் பா.ம.க., இருப்பதால் கார்த்தியாயினி கணிசமான ஓட்டுகளைப் பிரிப்பார். இதனால் தனது வெற்றி எளிதாக இருக்கும் என திருமாவளவன் கணக்கு போட்டிருந்தார்.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் கட்சி சாராதவர்கள் ஒரு குழுவாக, சிதம்பரம் தொகுதியில் பல இடங்களில் நேற்று முதல் வீடு வீடாகப் பிரசாரம் செய்துவருகின்றனர். இதற்காக வாட்ஸாப் குழுக்களை உருவாக்கிஉள்ளனர்.

'சனாதன சங்கிகள் சங்கமம்' என்ற பெயரில் நடக்கும் இந்த பிரசாரத்தை, சிதம்பரம் நடராஜர் கோவில் முன்பு ஹிந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் துவக்கி வைத்தார்.

சனாதன தர்மத்தை அழிப்போம் என்றும் நடராஜர் கோவிலுக்கு எதிராகவும் செயல்பட்டு வரும், கோவில் சிற்பங்களை ஆபாசம் எனக் கூறிய திருமாவளவனை தோற்கடிக்க வேண்டும் என அவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்