அற்ப காரணங்களைக் கூறி நிராகரிப்பு: தேர்தல் கமிஷனுக்கு எதிராக தி.மு.க., வழக்கு
தி.மு.க.,வின் தேர்தல் விளம்பரங்களுக்கு அனுமதி கொடுப்பதில் தேர்தல் கமிஷன் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தொடர்ந்து இந்த வழக்கின் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
தேர்தல் கமிஷனின் விதிப்படி அனைத்துக் கட்சிகளும் விளம்பரம் செய்வதற்கு முன் அனுமதியைப் பெற வேண்டும் என்ற விதி உள்ளது. தி.மு.க.,வின் தேர்தல் விளம்பரங்களுக்கு முன் அனுமதியைக் கொடுப்பதற்கு ஆறு நாட்கள் வரையில் தாமதம் செய்கின்றனர்.
மக்களிடம் சாதாரண தகவல்களைக் கூறி விளம்பரம் செய்வதையும் அனுமதிக்கவில்லை. சில விளம்பரங்களை அற்ப காரணங்களைக் காட்டி நிராகரிக்கின்றனர். இதன்மூலம் தேர்தல் கமிஷனின் வெளிப்படைத்தன்மை என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தி.மு.க.,வின் மனு மீது 2 நாள்களில் பரிசீலித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட வேண்டும். எங்களின் விண்ணப்பத்தை நிராகரித்த தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஏப்.,15 அன்று விசாரணைக்கு வரவுள்ளது.
வாசகர் கருத்து