ஓட்டு எண்ணிக்கை மைய பாதுகாப்பில் 1075 போலீசார்
தேனி: தேனி லோக்சபா தேர்தல் ஓட்டு எண்ணிக்கை மையத்தில் எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் 1075 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையத்தினை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா, பார்வையாளர் ஆய்வு செய்தனர்.
இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடந்த ஓட்டுப்பதிவு ஜூன் 1ல் நிறைவடைந்தது. நாளை லோக்சபா தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. தேனி லோக்சபா தொகுதியில் பதிவான ஓட்டுகள் கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவார் சங்க கல்லுாரிகளில் எண்ணப்படுகின்றன. இதற்காக சட்டசபை தொகுதி வாரியாக, தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு இடங்கள் தயார் செய்யப்பட்டு உள்ளன. கல்லுாரி வளாகத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு அமைக்கப்பட்டுளளன. மேலும் கல்லுாரி வளாகம், ஓட்டு எண்ணும் இடங்கள் என 300க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. ஓட்டு எண்ணிக்கையின் போது எஸ்.பி., சிவபிரசாத் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட 1075 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஓட்டு எண்ணிக்கையை மையத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா, தேர்தல் பார்வையாளர் கவுரங்பாய் மக்வானா நேற்று ஆய்வு செய்தனர்.
வாசகர் கருத்து