நாளை மறுநாள் ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு பணியில் 1100 போலீசார்
சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதிக்கான ஓட்டு எண்ணும் பணி நாளை மறு நாள் காரைக்குடியில் நடக்கிறது. மாவட்டம் முழுவதும் ஆயிரத்து 100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
சிவகங்கை தொகுதியில் ஆயிரத்து 873 ஓட்டுச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நடந்தது.
அனைத்து ஒட்டுப்பதிவு இயந்திரங்களும் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லுாரி மற்றும் அழகப்பா பாலிடெக்னிக் கல்லுாரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன.
நாளை மறு நாள் காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லுாரி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளிலேயே ஓட்டுக்கள்எண்ணப்பட உள்ளன.
தேர்தல் பாதுகாப்பு பணியில் நாகலாந்து ஆயுதப்படை போலீஸ், திருச்சி பட்டாலியன்போலீஸ், ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ், சிவகங்கை மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றுபவர்கள் என 2 ஆயிரத்து 200 போலீசார் ஈடுபடுத்தப்பட்டனர்.
தேர்தல் முடிவடைந்த நிலையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மத்திய பாதுகாப்பு படையினரில் 92 பேர் மற்றும் மாவட்ட போலீசார் ஒட்டு இயந்திர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாளை மறு நாள் ஒட்டு எண்ணும் பணியின் போது காரைக்குடி மையத்தில் எஸ்.பி., டோங்கரே பிரவீன் உமேஷ் தலைமையில் 3 ஏடிஎஸ்பிகள், 10 டிஎஸ்பிக்கள், 30 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 600 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
மேலும் மாவட்டம் முழுவதும் நகர்ப்பகுதி மற்றும் பிரச்னைக்கு உரிய இடங்களில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
வாசகர் கருத்து