'உதயாவின் நிழலாக எழுவாய்' செந்தில் பாலாஜி வீடியோ வைரல்

சென்னை புழல் சிறையில் உள்ள, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு ஜாமினில் வர வாய்ப்பில்லை.

இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் வீடியோ ஒன்றை தயார் செய்து வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அந்த வீடியோ, ஐந்து நிமிடம், 37 வினாடிகள் ஓடுகிறது.

வீடியோவில், 'எங்கள் செந்தில் பாலாஜி, தங்க செந்தில் பாலாஜி, ஸ்டாலின் இதயத்தில் நிலைத்து இருப்பாய், உதயாவின் நிழலாக சிலிர்த்து எழுவாய், நாற்பதும் நமதே' என, ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாடல் பாடுவது போல தயாரிக்கப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், செந்தில் பாலாஜி, கடந்த சட்டசபை தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரங்களில், ஓட்டு கேட்பது, ஓடுவது, பொதுமக்களிடம் குறை கேட்பது, அமலாக்க துறை கைது செய்தபோது, காரில் அழுது புலம்பியது, வேனில் சிறைக்கு செல்வது, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு ஆஜராக நடந்து செல்வது உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

வீடியோவை, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள், வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்