Advertisement

ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம் : பிரசார வீடியோ வெளியிட்ட பழனிசாமி

''அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில், இந்த தேர்தல் அறிக்கையினை தயாரித்துள்ளோம்'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

தமிழக வாக்காளப் பெருமக்களே, உங்கள் எண்ணங்களின் தேவைகளின் பிரதிபலிப்பே, அ.தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் எங்களது பிரதிநிதிகள் சென்று அனைத்து தரப்பு மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறிந்து, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் வகையில், இந்த தேர்தல் அறிக்கையினை தயாரித்துள்ளோம்.

வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள மகளிருக்கு மாதம்தோறும் ஊக்கத்தொகை 3000 ரூபாய் வழங்க வேண்டும். வருடத்துக்கு 6 விலையில்லா கேஸ் சிலிண்டர்கள், மாநிலங்களுக்கு உரிய நிதிப்பகிர்வு, மேக்கேதாட்டு, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்டுவது உள்ளிட்ட 133 வாக்குறுதிகளை அளித்துள்ளோம்.

வெற்று பிம்பங்களோ, விளம்பர நோக்கமோ இன்றி நடைமுறைக்கு சாத்தியமான வாக்குறுதிகள் கொண்ட உண்மையான அறிக்கையை அளித்த பெருமிதத்துடன், உங்களை எல்லாம் சந்திக்க வருகிறேன்.

தமிழர் உரிமை மீட்போம். தமிழ்நாடு காப்போம். ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் விறுவிறு

தினமலர் முதல் பக்கம்