கண் அசைவில் செயல்பட செந்தில் பாலாஜி நியமித்த எம்.பி.,
முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான செந்தில் பாலாஜி சிறையில் உள்ள நிலையில், கரூர் தொகுதிக்கு தேர்தல் பொறுப்பாளராக, புதுக்கோட்டையை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., அப்துல்லா நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:
செந்தில் பாலாஜி கைதாகி, 10 மாதங்கள் நெருங்கும் நிலையில், கரூர் மாவட்டத்திற்கு பொறுப்பாளர் நியமிக்கப்படவில்லை. மாவட்டத்தில் சொல்லிக் கொள்ளும்படி எந்த செயல்பாடும் இல்லை. கட்சியில் ஒருங்கிணைப்பு இல்லை என, தலைமைக்கு புகார்கள் சென்றன.
இந்நிலையில் தான், தேர்தல் பொறுப்பாளராக அமைச்சர்கள் நேரு, வேலு, சக்கரபாணி, ராஜா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் நியமிக்கப்படவில்லை.
அதனால், சிறையில் இருந்தபடி இவற்றை எல்லாம் கவனிக்கும் செந்தில் பாலாஜி, தனக்கு வேண்டியவரை பொறுப்பாளராக நியமிக்க காய் நகர்த்தினார். அதன்படி, ராஜ்யசபா எம்.பி.,யும் அயலகப் பிரிவு தலைவருமான எம்.எம்.அப்துல்லா, கரூர் மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், செந்தில் பாலாஜி கண் அசைவில் கரூர் மாவட்ட தி.மு.க., நிர்வாகத்தை கொண்டு செல்வார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து