கட்சி கொடுத்த தேர்தல் நிதி செலவுக்கு தயங்கும் 'மாஜி'
பெரம்பலுார் தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் சந்திரமோகன் போட்டியிடுகிறார். தேர்தல் செலவுக்கு கட்சி தலைமை கொடுத்த பணம் இன்னும் கைக்கு வந்து சேராததால் திணறி வருகிறார்.
இதுகுறித்து கட்சியினர் கூறியதாவது:
இத்தொகுதிக்கு பொறுப்பாளராக, முன்னாள் அமைச்சர் பரஞ்சோதியை நியமித்த கட்சி தலைமை, தேர்தல் செலவுக்காக அவரிடம் கணிசமான தொகையையும் கொடுத்துள்ளது. ஆனால் அவர் பணத்தை வெளியில் எடுக்கவே தயங்குகிறார். உள்ளூர் நிர்வாகிகளை செலவு செய்ய சொல்கிறார். கடைசி நேரத்தில் சரியாக பணம் வந்து விடும் என்று பேசியே, பணத்தை எடுக்காமல் காலத்தை தள்ளுகிறார்.
தொகுதியில், தி.மு.க., - பா.ஜ., வேட்பாளர்கள் பணத்தை தண்ணியாக செலவழித்து வருகின்றனர். தொகுதியில் அதிகளவில் முத்தரையர் இருப்பதால்தான் அதே சமூகத்தை சேர்ந்த வேட்பாளரை கட்சி தலைமை நியமித்தது. எனினும் முன்னாள் அமைச்சரால் பிரசாரம் மிகவும் தொய்வடைந்து விட்டது.
தி.மு.க., வேட்பாளர் எளிதில் வெற்றி பெற்று விடுவார்.டீ செலவு கூட, கட்சி தொண்டர்களே செய்து கொள்ள வேண்டும் என்றால், எப்படி ஆட்கள் வருவர்?
இவ்வாறு அவர்கள் புலம்பினர்.
வாசகர் கருத்து