பழைய வீடியோக்களை அழிக்கும் தி.மு.க.,
தேனி லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில் தங்க தமிழ்செல்வன் போட்டியிடுகிறார். ஜெயலலிதா இருந்த வரை அ.தி.மு.க., சார்பில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ., ராஜ்யசபா எம்.பி., உள்ளிட்ட பதவிகளை வகித்தார். அவர் மறைவிற்குப்பின், தினகரன் அணியில் இணைந்து எம்.எல்.ஏ., பதவியை இழந்தார்; அ.ம.மு.க., கொள்கை பரப்பு செயலராக பணியாற்றினர்.
கடந்த லோக்சபா தேர்தலில், அ.ம.மு.க., சார்பில் தேனி தொகுதியில் வேட்பாளராகவும் களமிறங்கினார். அப்போது அவர் குக்கர் சின்னத்திற்கு ஓட்டு கேட்டும், தி.மு.க.,விற்கு எதிராகவும், தினகரனை வாழ்த்தியும் பேசிய வீடியோக்கள் பல வெளியாகின.
ஆனால், கட்சியில் இருந்து விலகி, 2019 ஜூனில் இவர் தி.மு.க.,வில் இணைந்தார். தற்போது அவர் அ.ம.மு.க.,வுக்கு ஆதரவாக பேசிய வீடியோக்களை அக்கட்சியினர் சமூக வலைதளங்களில் வைரலாக்குகின்றனர்; அதை மற்றவர்களுக்கும் அனுப்புகின்றனர். இந்த வீடியோக்களை அழிக்கும் பணியில் தி.மு.க., - ஐ.டி., பிரிவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
வாசகர் கருத்து