'பா.ஜ.,வினரை மதிக்காத பாரிவேந்தர் மூன்றாவது இடம் போதுமா?'
பெரம்பலுார் தொகுதியில் பா.ஜ., கூட்டணி சார்பில் ஐ.ஜே.கே., நிறுவனர் பாரிவேந்தர் மூன்றாவது முறையாக மீண்டும் போட்டியிடுகிறார். அவர் கூட்டணி கட்சியினரான பா.ஜ.,வினரை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து பா.ஜ.,வினர் கூறியதாவது:
அவர் தன் பிரசாரத்தின் போது பா.ஜ., கூட்டணிக் கட்சியின் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளை, பிரசார வேனில் ஏற்றாததுடன், பேசவும் சொல்லுவதில்லை.
ஓட்டு கேட்டு பேசுகையிலும், 'ரயில் போக்குவரத்துக்கு பாதி வேலை முடிந்தது. மீண்டும் எம்.பி., ஆனால் உடனே ரயில் கொண்டு வருவேன். ஏழைகளுக்கு 10 லட்சம் ரூபாய்க்கு இலவச காப்பீடு திட்டம் தருவேன். உழைத்த பணத்தில் உங்களுக்கு செலவு செய்கிறேன்' என, தன்னைத் தானே புகழ்ந்து கொள்கிறார்.
கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகளின் பெயர்களை மருந்துக்கு கூட பாரிவேந்தர் சொல்லுவதில்லை. தற்போதுள்ள நிலையில், வெற்றி வாய்ப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள அவர், இப்போதே அமைச்சர் ஆகிவிட்ட மிதப்பில் இருக்கிறார்.
இதனால், கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ளனர்.
இவ்வாறு பா.ஜ.,வினர் புலம்பினர்.
வாசகர் கருத்து