7 தொகுதிகள் கேட்கிறார் ஐ.ஜே.கே., பாரிவேந்தர்
ஐ.ஜே.கே., நிறுவன தலைவர் பாரிவேந்தர் அளித்த பேட்டி:
இந்திய ஜனநாயக கட்சி பா.ஜ., உடன் தோழமையாக உள்ளது. லோக்சபா தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து, பா.ஜ., குழுவுடன் ஆலோசனை நடந்தது.
எத்தனை தொகுதி என்ற எண்ணிக்கை குறித்து பேசவில்லை. தேர்தலில் வெற்றி வாய்ப்பு உள்ள தொகுதிகள் குறித்து பேசப்பட்டது.
இதுவரை, பேச்சு நன்றாகவே செல்கிறது. ஐ.ஜே.கே., ஏழு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளது.
எனக்கு ராஜ்யசபா பதவி அளித்தால் வேண்டாம் என்பேன். மக்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டும். மக்கள் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், எம்.பி., பதவியே வேண்டாம் என்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து