தமிழகத்துக்கு தனிக்கொடி... எஸ்.சி, எஸ்.டி.க்கு தனி வங்கி: வி.சி., தேர்தல் அறிக்கை
லோக்சபா தேர்தலை ஒட்டி வி.சி., தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டுள்ளது. தமிழகத்துக்கு தனிக்கொடி முதல் எஸ்.சி, எஸ்.டி.,க்கு தனி வங்கி வரையில் ஏராளமான வாக்குறுதிகள் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் வி.சி., தேர்தல் அறிக்கையை திருமாவளவளன் இன்று வெளியிட்டார். அப்போது திருமாவளவன் பேசுகையில், "பா.ஜ.,வை வீழ்த்துவதற்கான தி.மு.க.,வின் முயற்சிக்கு வி.சி., துணை நிற்கும். 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாள்களாக உயர்த்துவோம். மத்திய அரசில் விவசாயத்துக்கென்று தனி பட்ஜெட் என அனைவரின் நலனையும் முன்னிறுத்தும் திட்டங்களை வி.சி., தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது" என்றார்.
தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
கவர்னர் பதவி ஒழிக்கப்பட வேண்டும். கவர்னரை பல்கலைக்கழகத்தின் வேந்தராக நியமிக்கக் கூடாது.
ராமர் கோயில் கட்டியதில் நடந்த ஊழல் முறைகேடுகள் விசாரிக்கப்படும்.
அம்பேத்கர் பிறந்த நாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்தும் திட்டத்தை எதிர்ப்போம்.
மின்னணு வாக்கு எந்திஙத்துக்கு பதில் வாக்குச்சீட்டு முறையை தொடர்ந்து பயன்படுத்த வி.சி., வலியுறுத்தும்
இந்தியா முழுவதும் தமிழ்ச் செம்மொழி வாரம் கொண்டாடப்பட வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.
எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு தனி வங்கித் திட்டம்
ஜி.எஸ்.டி வரிவிதிப்பு முறை ரத்து
தமிழகத்துக்கு தனிக்கொடி உருவாக்கப்படும்.
இந்தியாவின் இரண்டாவது தலைநகராக சென்னையை உருவாக்குதல்
ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம்
இந்துத்துவ சக்தியார் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க தேவையான முயற்சிகளை மேற்கொள்ளுதல்
கச்சத்தீவை மீட்க லோக்சபாவில் வி.சி., பாடுபடும்.
மத்திய, மாநில அளவில் பொது லோக்பால் அமைப்புகளை உருவாக்குதல்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தரப்படும்.
தேர்தல் ஆணையர் நியமன திருத்தச் சட்டம் ரத்து செய்யப்படும்.
அனைத்து மொழிகளிலும் அம்பேத்கரின் நூல்கள்.
விவசாயக் கடன் ரத்து, விவசாயத்துக்கு தனி பட்ஜெட்
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை ஒழித்தல்
இடுகாடு பணியில் இருந்து தலித்துகளை விடுவித்தல்
கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துதல்
நீட் தேர்வு ரத்து என்பன உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன.
வாசகர் கருத்து