ஓட்டு எண்ணும் மையத்தில் அரசு ஊழியர், முகவர்களுக்கு தனி 'கேட்'
ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், சித்தோடு அரசு பொறியியல் கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன், 4ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கிறது. இதனால் ஓட்டு எண்ணும் மையத்தில் அதற்கான ஏற்பாடுகள் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் கல்லுாரியின் பிரதான நுழைவு வாயில் வழியாக அனைவரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்தாண்டு இரு நுழைவு வாயில் அமைக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது. இதில் பிரதான நுழைவு வாயில் வழியாக வேட்பாளர், அவர்களது முகவர்கள் அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடும் ஊழியர், அரசு ஊழியர்கள் ஆகியோர், அத்திக்கடவு - அவினாசி திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக, ஓட்டு எண்ணும் மையத்துக்குள் செல்ல வழி தனியாக அமைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ஓட்டு எண்ணும் மையத்துக்கு, வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள், ஓட்டு எண்ணும் பணியில் ஈடுபடுவோர் போன்றோர் மிக எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பு சோதனைகளை முடித்து உள்ளே வர ஏதுவாகும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.1,200 போலீசார் பாதுகாப்புஓட்டு எண்ணும் தினமான ஜூன் 4ல் ஓட்டு எண்ணும் மையம், மக்கள் அதிகம் கூடும் இடங்களில், 1,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.இதுபற்றி போலீசார் கூறியதாவது: ஓட்டு எண்ணும் மையமான சித்தோடு ஐ.ஆர்.டி.டி., கல்லுாரியின் உட்புறம், வெளிப்புறம் ஆயுதப்படை போலீசார், லோக்கல் போலீசார், ஊர் காவல் படையினர் என, 900 பேர் இடம் பெற்றிருப்பர். இது தவிர ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்ட், கட்சி அலுவலகங்கள், மக்கள் கூடும் இடங்கள் என முக்கிய இடங்களில், 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். ஓட்டு எண்ணும் தினத்தில் பொது இடங்களில் பட்டாசு வெடித்தல், அதிகளவில் ஒன்று கூட, ஊர்வலம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.
வாசகர் கருத்து